இந்திய ட்ரோன்களை நாங்க ஏன் சுடவில்லை தெரியுமா? பாக். அமைச்சர் விளக்கம்! பாதுகாப்பு நிபுணர்களே ஷாக்
இஸ்லாமாபாத்: எப்பவும் ஒரு 'ஆஃப் பீட்' கருத்து சொல்லி சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இப்ப மறுபடியும் ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கார். இந்திய டிரோன்களை நாங்க வேணும்னே சுடலை, ஏன்னா சுட்டிருந்தா எங்க பாதுகாப்பு நிலைகள் இந்திய ராணுவத்துக்கு தெரிஞ்சிடும்னு புது லாஜிக் சொல்லியிருக்கார். இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிஞ்ச அடுத்த நாள் இந்த விளக்கத்தை கொடுத்திருக்கார்.
நேற்று முன் தினம் (புதன்கிழமை), இந்தியா ஒன்பது தீவிரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தி பல பயங்கரவாதிகளை அழித்தது. இதற்கு பதிலடியாக, நேற்று (வியாழக்கிழமை) பாகிஸ்தான் சுமார் 35 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியாவின் அசத்தலான பதிலடியால் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், பாதுகாப்பு அமைச்சர் இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்.

பாராளுமன்றத்தில் பேசியபோது, "எனக்கு நிறைய விவரங்கள் சொல்ல முடியாது. ஆனா, நேத்து இந்திய டிரோன்களை நாங்க தடுக்காததுக்கு காரணம், எங்க பாதுகாப்பு நிலைகளை அவங்களுக்கு காட்ட விரும்பலைங்கிறதுதான்" என்று அடித்து சொல்லியிருக்கிறார். அதாவது, 'எங்க டிஃபன்ஸை எதிரி பார்த்துட்டாங்கன்னா என்ன பண்றது, அதனால டிரோனை சுடலையாம்!' என்ன ஒரு சூப்பர் ரகசிய வியூகம் இது!
ஆனா, கவாஜா ஆசிஃப் இப்படி வினோதமான விளக்கங்களை கொடுத்து பாகிஸ்தானின் தோல்விகளை மறைக்க பார்க்கிறது இது முதல் தடவை இல்லை. சமீபத்தில்தான், 'ஆபரேஷன் சிந்துார்' அப்போ, இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறிவிட்டு, ஆதாரத்தை நிருபர் கேட்டபோது, 'சமூக ஊடக கண்டென்ட்'டை ஆதாரமா காட்டி சர்வதேச மீடியாக்கள்ல கேலி செய்யப்பட்டார். அப்போ, "எல்லாம் சோஷியல் மீடியால இருக்கு, பாத்துக்கோங்க!"ன்னு சொல்லி சமாளிச்சார். இப்போ, 'டிரோனை வீழ்த்தாதது டிஃபன்ஸ் ரகசியம்'னு புது விளக்கம்!
இதுக்கு முன்னாடி, "பேச்சுவார்த்தை இல்லைன்னா துப்பாக்கிதான் பேசும்! இந்தியாவுக்கு இனி பொறுமை காட்ட முடியாது, இங்கேயே நிறுத்தணும்!"னு வீர வசனம் பேசியவர் இவர்தான். ஆனா, துப்பாக்கி பேசுறதை விடுங்க. ஊருக்குள் வந்த டிரோன்களைக்கூட சுடாததுக்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டா, 'சரிங்க ஐயா, நீங்க சொல்றதே இருக்கட்டும்'னு சொல்லாம இருக்க முடியாது!
ஆக மொத்தத்துல, டிரோன்களை சுடாதது 'பயமில்லை, அது எங்க சூப்பர் ரகசிய பாதுகாப்பு திட்டம்'னு கவாஜா ஆசிஃப் சொல்றத கேட்டா, அவர் அடுத்த என்ன புது புது 'ஐடியா' சொல்ல போறாரோன்னு உலகமே காத்திருக்க வேண்டியதுதான்!
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications