இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாக்.. சர்ச்சையாகும் இம்ரான் கான் முகப்புப்படம்!
இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக இன்று பாகிஸ்தான் அனுசரித்தது.
இஸ்லாமாபாத்: இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக இன்று பாகிஸ்தான் அனுசரித்தது. இரண்டு நாட்டு உறவில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது. அதேபோல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டு போட்டது.
இதுதான் பாகிஸ்தான் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இன்று என்ன
அதேபோல் இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து இருந்தது. இன்று இந்தியாவின் 73வது சுதந்திர தினம் ஆகும். கார்கில் போர் நடந்த போது பாகிஸ்தான் இந்தியா மீது இத்தனை கோபத்தில் இருந்தது கிடையாது.

கடும் கோபம்
ஆனால் தற்போது காஷ்மீர் பிரச்சனை காரணமாக இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபத்தில் இருக்கிறது. ஏற்கனவே இந்தியா மீது ஐநாவில் பாகிஸ்தான் புகார் கொடுத்துள்ளது. அதேபோல் சீனாவிடமும் இந்தியா குறித்து முறையிட்டுள்ளது.

என்ன
இந்த நிலையில் தற்போது இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக பாகிஸ்தான் அனுசரித்தது. அதோடு பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. பாகிஸ்தான் நெட்டிசன்கள் தங்கள் டிவிட்டர் டிபியை கருப்பு நிறத்தில் மாற்றி இருந்தனர்.

இம்ரான் கான்
அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது படத்திற்குப் பதிலாக கருப்பு கலரை பிரோபைல் போட்டோவாக மாற்றி இருந்தார். அவரின் இந்த செயல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராக இந்தியர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications