வாலை சுருட்டி கொண்டு ஓடிய பாகிஸ்தான்.. இஸ்ரேல் தந்த பதிலடியால் அடுத்த நிமிடமே டெலிட்!
இஸ்லாமாபாத்: உலக அரங்கில் எதாவது ஒன்றைச் செய்யப் போய்.. அது வேறு விதமாக முடிந்து தர்ம சங்கடத்தை எதிர்கொள்வது பாகிஸ்தானுக்கு முதல்முறை இல்லை. இப்போதும் அப்படியே அதேபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை வீர ஆவேசமாக விமர்சித்துப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், அடுத்த நிமிடமே அதை டெலிட் செய்துவிட்டு ஓடிவிட்டார். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
சர்வதேச மன்றங்களில் "நாங்கள் தான் அமைதித் தூதுவர்" என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது பாகிஸ்தானுக்கே உரித்தான ஸ்டைல். இப்போது இஸ்ரேல் - லெபனான் எல்லைகளில் மோதல்கள் தொடரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது ட்விட்டரில் போட்ட போஸ்ட் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், போட்ட வேகத்திலேயே அதை அவர் நீக்கியதுதான் இப்போது பெரிய கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான்
ஈரான் போர் விவகாரத்தில் பாகிஸ்தான் தான் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஈரான் மீது மட்டுமின்றி லெபனான் மீதும் எந்தவொரு தாக்குதலும் இனி இருக்காது எனப் பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல், இந்த அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் இல்லை எனக் கூறியது. மேலும், லெபனான் மீது மிக கொடூரமாகத் தாக்குதலையும் நடத்தியது. பாகிஸ்தான் பேச்சுக்கு எந்தளவுக்கு மரியாதை உள்ளது என்பதையே இது காட்டுவதாக இருந்தது.
சர்ச்சை போஸ்ட்
இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களால் ஆத்திரமடைந்த கவாஜா ஆசிப், "இஸ்ரேல் என்பது மனித குலத்திற்கே ஒரு சாபம் மற்றும் தீமை" என்பது போல பதிவிட்டார். அதுமட்டுமின்றி, இஸ்ரேலை உருவாக்கியவர்கள் "நரகத்தில் எரிவார்கள்" என்றும், அந்த நாட்டை ஒரு "புற்றுநோய்" என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
டெலிட்
அட பாகிஸ்தானுக்கு என்ன இவ்வளவு வீரம் வந்துடுச்சா என நினைத்தால், அடுத்த நிமிடமே ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்தது. அதாவது அமைச்சர் ஆசிப்பின் இந்தப் பதிவிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "பாகிஸ்தான் அமைச்சரின் இந்த அறிக்கை இஸ்ரேலை அழிக்கத் தூண்டும் செயல். அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகச் சொல்லும் ஒரு நாட்டிடம் இருந்து இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்களை ஏற்க முடியாது" என விளாசித் தள்ளினர்..
அவமானம்
இந்த சர்வதேச நெருக்கடியை உணர்ந்தோ என்னவோ, அமைச்சர் தனது பதிவை அவசர அவசரமாக டெலிட் செய்துவிட்டார். ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சரே ஒரு பதிவைப் போட்டுவிட்டு, அடுத்த நிமிடம் அதை நீக்கியிருப்பது பாகிஸ்தான் எந்த அளவிற்கு இஸ்ரேலின் ராஜதந்திர அழுத்தத்திற்குப் பயப்படுகிறது என்பதையே காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். "போஸ்ட் போடும்போது இருந்த வீரம், டெலிட் செய்யும்போது எங்கே போனது?" என நக்கலடித்து வருகிறார்கள்.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தலைமை தாங்கும் நாடு எப்போதும் நடுநிலையாக இருக்க வேண்டும். திட்டமிட்டபடி எதாவது நடக்கவில்லை என்றாலும் கூட முடிந்த வரை நடுநிலையாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோல கேன்சர் நாடு, மனிதக் குலத்திற்கே சாபம் என சொல்வது பாகிஸ்தானின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. கவாஜா ஆசிப்பின் இந்தச் செயல், பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் ஒரு மிக பெரிய 'ராஜதந்திர அவமானமாகவே' முடிந்துள்ளது!
-
ஈரானில் விழுந்த அமெரிக்க விமானி! இதய துடிப்பை வைத்து பிடித்த US.. CIAன் 'கோஸ்ட் மெர்மெர்' வேட்டை -
காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம்.. பாகிஸ்தானை நம்ப முடியாது! ஓபனாக சொன்ன இஸ்ரேல் -
நாளை மறுநாள் முக்கியமான மீட்டிங்! களத்தில் அமெரிக்க அதிகாரிகள்! வளைகுடா எதிர்காலமே இதில்தான் இருக்கு -
டிரம்ப்பை மதிக்காத இஸ்ரேல்? போரை நிறுத்துவதாக அமெரிக்கா சொல்லிய பிறகும் ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு -
போர் நிறுத்தம் அறிவித்தாலும் ஈரான் மீது தொடரும் தாக்குதல்.. பதிலடி தாக்குதலும் நடப்பதால் ஓயாத டென்ஷன் -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! -
கண்கள் சிவந்த பிபி.. "டிரம்ப் இப்படி பண்ணிட்டாரு.." கடும் கோபத்தில் நெதன்யாகு.. என்ன நடந்தது? -
வெடித்தது பூகம்பம்.. ஈரான் அடுக்கிய 3 மெகா குற்றச்சாட்டு.. அமெரிக்காவின் அடுத்த ஆக்ஷன் என்ன? -
10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்! அடங்க மறுக்கும் இஸ்ரேல்.. லெபனான் மீது கொடூர தாக்குதல்! மீண்டும் போர்? -
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் நெதன்யாகு.. லெபனானை தொடர்ந்து தாக்குவோம் என இஸ்ரேல் திட்டவட்டம்












Click it and Unblock the Notifications