ஷாக் கொடுக்கும் தேர்தல் முடிவுகள்.. பிளான் பி யை கையில் எடுக்க தயாராகும் நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் கட்சி ஆதரவில் சுயேட்சையாக போட்டியிட்ட 47 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர்களுடன் நவாஸ் ஷெரீப்பின் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி ஆட்சியை அமைக்க நவாஸ் ஷெரீப் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
பாகிஸ்தானில் 264 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 133 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். ஆனால், பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது கடினமானது என்றே தெரிகிறது.

குறிப்பாக இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலரும், சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். இம்ரான் கான் கட்சியினரும் சவால் அளிக்கும் எண்ணிக்கையில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்று வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 107 தொகுதிகளில் 47 இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால், நவாஸ் ஷெரீப் பிளான் பியை கையில் எடுத்துள்ளார். அதாவது சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர்களுடன் நவாஸ் ஷெரீப்பின் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி ஆட்சியை அமைக்க நவாஸ் ஷெரீப் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
பாகிஸ்தானில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி 17 இடங்களில் வென்றுள்ளது. பாகிஸ்தானில் சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாக நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் இஷாக் தார் கூறினார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications