இந்திய ஏவுகணை உள்ளே வந்ததும்.. பதில் தாக்குதலுக்கு ரெடியான பாக்? அடுத்து நடந்தது என்ன? ரிப்போர்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை கடந்த வாரம் சென்றதும் பாகிஸ்தானும் பதில் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் கடந்த வாரம் புதன் கிழமை மாலை சென்றது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ தூரம் வரை இந்த ஏவுகணை சென்றது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்த ஏவுகணை எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. இதில் குண்டுகள், ஆயுதங்கள் இல்லை என்பதால் சேதம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் Inter-Services Public Relations பிரிவின் இயக்குனர் பாபர் இப்திக்கார் பேட்டி அளித்துள்ளார்.

என்ன நடந்தது?
இந்த ஏவுகணை 3 மேக் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ மீட்டர் வரை வந்தது. ஏவப்பட்ட நேரத்தில் இருந்து 6.46 நிமிடங்கள் இது பறந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை ஆகும். இது ஆயுதம் பொருத்தப்பட்டது அல்ல. பயிற்சிக்காக தயார் நிலையில் இருந்த practice version பிரம்மோஸ் ஆகும்.

வருத்தம்
முதலில் இந்தியாவின் சிர்சா பகுதியில் இது ஏவப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்திய தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் சிர்சா ஏவுகணை தளத்தில் இருந்து இது ஏவப்படவில்லை. மாறாக பிரம்மோஸ் ஏவுகணை ரகசிய சாட்டிலைட் ஏவுதளம் ஒன்றில் இருந்துதான் ஏவப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் இந்த ஏவுகணையை டிராக் செய்ய முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பராமரிப்பு பணியின் காரணமாகவும் இந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

பாகிஸ்தான் முயன்றது
இந்த நிலையில் இந்தியாவின் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் கடந்த வாரம் புதன் கிழமை தயாரானதாக bloomberg ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பின் மியான் சன்னு பகுதியில் இந்த பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியது. இதையடுத்து பதிலடியை பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதற்காக ஏவுகணையை தயார் செய்தது.

ஆனால் செய்யவில்லை
ஆனால் பாகிஸ்தான் கடைசியில் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவில்லை. இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததில் ஏதாவது தவறு நடந்து இருக்கலாம். இதில் எதோ பிரச்சனை இருக்கிறது என்பதை கணித்து பாகிஸ்தான் பதில் ஏவுகணை அனுப்பும் திட்டத்தை கைவிட்டதாக bloomberg ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தியை இந்திய பாதுகாப்புத்துறை அல்லது ராணுவ பிரிவு தலைவர்கள் யாரும் உறுதி படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் இது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

ஆப் செய்யப்பட்டது
இந்தியா சார்பில் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதும், உடனே இந்தியாவில் அனைத்து ஏவுகணை சிஸ்டமும் அணைக்கப்பட்டுள்ளது. தவறுதலாக வேறு ஏவுகணை ஏவப்பட கூடாது என்பதால் விமானப்படை உடனே ஏவுகணைகளை அணைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அளித்த பேட்டியில், இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட உடனே அந்த ஏவுகணையை நாங்கள் கண்காணித்துவிட்டோம். ஆனால் இது விபத்து போல இருந்ததாக நாங்கள் சந்தேகித்தோம். அப்படி மட்டும் நாங்கள் சந்தேகிக்காமல் இருந்திருந்தால் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications