முடிவிற்கு வரும் இம்ரான் கான் ஆட்சி.. பாக்.கில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி.. பரபரப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
Recommended Video
பாகிஸ்தானில் இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக இருக்கும் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
எதிர்க்கட்சிகள் சார்பாக புதிய பிரதமர் அங்கு பதவி ஏற்கும் சூழ்நிலை நிலவி வருகின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவர்களின் உள்நாட்டு ராணுவம் மற்றும் சொந்த கட்சி எம்பிக்களே எதிர்ப்பு தெரிவித்த நிலையில்தான் இந்த ஆட்சி மாற்றம் நடக்க உள்ளது.

கூட்டணி வாபஸ்
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளன. இன்று அதில் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் ஆதரவை வாபஸ் பெற்றது.

ஆதரவு தர முடிவு
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார தட்டுப்பாடு, மந்தநிலை, விலைவாசி உயர்வு காரணமாக உட்கட்சிக்கு உள்ளேயே இம்ரான் கானுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் இம்ரான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அங்கு ராணுவமும் இம்ரான் கானுக்கு ஆதரவாக இல்லை.

இம்ரான் கான் எம்பிக்கள்
இந்த நிலையில் அவரின் சொந்த கட்சி எம்பிக்கள் வரிசையாக பதவி விலக தொடங்கினர். இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரிசையாக அங்கு எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். மொத்தம் 22 எம்பிக்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். அதோடு ஆட்சிக்கு தாங்கள் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினார்கள். இதனால் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை போகும் சூழ்நிலை ஏற்பட்டது. முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் கட்சியும் ஆளும் கட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

என்ன நடந்தது
இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 2.20 மணிக்கும் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சிக்கு தந்த ஆதரவை முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் வாபஸ் வாங்கியது. இதனால் அங்கு ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் ஆளும் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பி உள்ளது. இதனால் அங்கு இம்ரான் கான் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications