For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்கா ஸ்கெட்ச்! காத்திருந்து பாய்ந்த பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. இம்ரான் கான் மீது வழக்கு.. பரபர

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 150 பேர் மீது அந்நாட்டின் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,

Recommended Video

    Imran Khan மீது வழக்கு போட்ட Pakistan PM Shehbaz Sharif! | OneIndia Tamil

    பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அவரது ஆட்சியில் பாகிஸ்தான் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து வந்தது.

    இதைச் சமாளிக்க அவரால் முடியவில்லை. இதனால் அங்கு நாளுக்கு நாள் அரசியல் அழுத்தம் அதிகரித்தது. இந்தச் சூழலில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குக் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தர, அவரது அரசு கவிழ்ந்தது.

    இந்த விசயத்துல பாகிஸ்தானை விட இந்தியா பெஸ்ட் - முன்னாள் பிரதமர் இம்ரான் கானே சொல்றாரு கேளுங்க இந்த விசயத்துல பாகிஸ்தானை விட இந்தியா பெஸ்ட் - முன்னாள் பிரதமர் இம்ரான் கானே சொல்றாரு கேளுங்க

     பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இதற்கிடையே அந்நாட்டின் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இந்தச் சூழலில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண போலீசார் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாக். பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் சவூதி அரேபியா சென்று இருந்த போது, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     கோஷம்

    கோஷம்

    இது தொடர்பாக பல வீடியோக்கள் இணையத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த வியாழக்கிழமை மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதிக்கு ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவின் சென்று இருந்தனர். அப்போது அங்குக் காத்திருந்த இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஷேபாஸ் ஷெரீப் பார்த்து திருடன் (சோர்) என்றும் துரோகி (கதர்) என்று கத்தினர். இதுமட்டுமின்றி காதிலேயே கேட்க முடியாத ஆபாச வத்தைகளைக் கொண்டும் திட்டி கோஷமிட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 5 பேரை மதீனா காவல்துறை கைது செய்துள்ளது.

     150 மீது வழக்குப்பதிவு

    150 மீது வழக்குப்பதிவு

    இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் பி.டி.ஐ தலைவருமான இம்ரான் கான், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஃபவாத் சவுத்ரி, பிரதமரின் முன்னாள் ஆலோசகர் ஷேக் ரஷீத் உட்பட 150 பேர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் துணைச் சபாநாயகர் காசிம் சூரி மற்றும் லண்டனில் உள்ள இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர்களான அனில் முஸரத் மற்றும் சாஹிப்சாதா ஜஹாங்கிர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     போலீசார் தகவல்

    போலீசார் தகவல்

    இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர் அறிக்கையின்படி, மதீனாவில் ஷேபாஷ் ஷெரீஃப் மற்றும் அவரது குழுவைக் குறிவைத்து அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் இருந்து இம்ரான் கானின் 100 ஆதரவாளர்கள் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டனர். இம்ரான் கான் மற்றும் பிற தலைவர்கள் ஆலோசனைப்படியே இப்படி நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    மறுப்பு

    மறுப்பு

    இந்த விவகாரம் பாகிஸ்தான் நாட்டில் பூதாகரம் ஆகியுள்ளது. வெளிநாட்டில் வைத்து பிரதமரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்ரான் கான் செயல்பட்டு உள்ளதாகப் பலரும் சாடி வருகின்றனர். இது குறித்துக் கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி ஒன்றுக்கு இம்ரான் கான் அளித்த பேட்டியில், இந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றே கூறி இருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "புனித இடத்தில் வைத்து யாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பச் சொல்ல மாட்டேன்" என்றார்.

    English summary
    Pakistan’s Punjab police have booked ousted prime minister Imran Khan and 150 others: (இம்ரான் கான் உட்பட 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பாகிஸ்தான் போலீசார்) Imran Khan controversy latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X