கடலில் மூழ்கி எழுந்து.. தண்ணீர் சொட்ட சொட்ட தகவல்களை தந்த பாக். செய்தியாளர்! வேற லெவல் கடமை உணர்ச்சி
இஸ்லாமாபாத்: பைபர்ஜாய் புயலை எதிர்கொள்ளப் பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில், அங்கே ரிப்போர்ட்டர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்துவிட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இப்போது கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், வெப்பம் குறைய ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே தென்தமிழகத்தில் சில இடங்களில் பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் வெப்பம் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த 2, 3 மாதங்களாகக் கோடை வெப்பத்தால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மழை நமக்குச் சற்று இதமாக அமைகிறது. இதற்கிடையே வங்கக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் காரணமாகக் கணிசமாக மழை பெய்து வருகிறது.

புயல்: இந்த பைபர்ஜாய் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்ற போதிலும், பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. இந்த புயல் இன்று இரவு 9 மணியளவில் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் அதி தீவிர சூறாவளி புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.. பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் போது, 125 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் அனைவரும் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில மணி நேரமாகவே குஜராத் மற்றும் பாகிஸ்தானில் சில இடங்களில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மேலும், கடல் அலைகளின் உயரமும் அதிகரித்துள்ளது.
இந்த கடுமையான புயல் காரணமாக சுமார் 120 கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பைபர்ஜாய் புயலால் ஏற்கனவே பல இடங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்: இந்தப் புயல் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானையும் தாக்க உள்ளது. பொதுவாகப் புயல் போன்ற காலங்களில் டிவி சேனல்கள் மூலமே மக்கள் உடனுக்கு உடன் துல்லிமயான அப்டேட்களை தெரிந்து கொள்வார்கள். செய்தியாளர்களும் சூறாவளிக் காற்றையும் தாண்டி களத்தில் இருந்தபடி செய்திகளை உடனுக்கு உடன் தருவார்கள். இருப்பினும், செய்தியாளர்கள் சிலர் செய்யும் காரியங்கள் இணையத்தில் டிரெண்டாகிவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
அந்த வீடியோவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் பைபர்ஜாய் புயல் குறித்து டிவியில் நேரலை ரிப்போர்ட்டிங் அளித்து வருகிறார். அப்போது அவர் புயல் குறித்தும் அது இப்போது எங்கே இருக்கிறது வரும் நாட்களில் எங்கே மழை பெய்யும் என்பது எல்லாம் குறித்து அவர் விளக்குகிறார். அப்படியே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கும் அவர், திடீரென அப்படியே மைக்குடன் கடலிலேயே குதித்து விடுகிறார்.

ஒரே ஜம்ப்: அப்போதும் ரிப்போர்ட்டிங் செய்வதை விடாமல், கடலில் குதித்த பின்னரும் வானிலை குறித்த தகவல்களை அளிக்கிறார். மேலும், நிலம் தென்படாத அளவுக்கு நீர் அளவு அதிகரித்துவிட்டதாகவும் கடலுக்கு அடியில் செல்ல முடியாத அளவுக்கு மழை பெய்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.
அதன் பிறகு கடலில் இருந்து அப்படியே மெல்ல ஏறிய அந்த நபர், தண்ணீர் சொட்டச் சொட்ட கராச்சியில் உள்ள அப்துல் ரெஹ்மான் நியூஸக்காக ஒளிப்பதிவாளர் தைமூர் கானுடன், அப்துல் ரெஹ்மான் கான் என்று சொல்லி தனது ரிப்போர்டிங்கை முடிக்கிறார். இந்த வீடியோ இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், இது உண்மையாகச் செய்தி சேகரிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவா இல்லை கிண்டல் செய்யும் வகையில் யாராவது எடுத்துப் பதிவிட்ட வீடியோவா எனத் துல்லியமாகத் தெரியவில்லை.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications