பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. சைலன்ட்டாக சம்பவம் செய்த இந்தியா! மாஸ்டர் ஸ்ட்ரோக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையே தான் அரிசி ஏற்றுமதியால் கல்லா கட்டி வந்த பாகிஸ்தான், நம் நாடு எடுத்த ஒரு முடிவால் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி 40 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. மேலும் நம் நாட்டையும் சீண்டி வருகிறது. கடந்த ஆண்டு தான் பஹல்காம் தாக்குதலுக்கு நம் நாடு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. ஆனாலும் பாகிஸ்தான் திருந்தவில்லை.

பாகிஸ்தானில் தற்போது நிதி நெருக்கடி உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதோடு, பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்கி நிர்வாகம் செய்து வருகிறது.
கல்லா கட்டிய பாகிஸ்தான்
இதற்கிடையே தான் பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதி வழியாக கல்லா கட்ட தொடங்கியது. நம் நாட்டை போல் பாகிஸ்தானிலும் அதிகளவில் அரிசி விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் பாஸ்மதி உள்பட பிற அரிசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதித்தது.
சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதிக்கு நம் நாடு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இது பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியது. இதனால் பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் வெளிநாடுகளுக்கு பாஸ்மதி உள்பட பிற அரிசி ரகங்கள் ஏற்றுமதியானது.
ஏற்றுமதி அதிகரிக்க திட்டம்
பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் மாலிக் பைசல் ஜஹாங்கீர் கூறும்போது, '' பாகிஸ்தானில் இருந்து பாஸ்மதி அரிசி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
பாஸ்மதி அல்லாத அரிசி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நாடுகளுக்கான அரிசி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
இந்தியா என்ட்ரி
இந்நிலையில் தான் சமீபத்தில் நம் நாடு அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை தளர்த்தியது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வெளிநாட்டினர் பாகிஸ்தானை கைவிட்டு நம் நாட்டின் அரிசியை வாங்க தொடங்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, அரிசி ஆர்டருக்கான வரிகள் மற்றும் வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. இதனால் வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும்போது விதிக்கப்படும் வரி வர்த்தகர்களுக்கு குறைந்துள்ளது. இதனால் நம் நாட்டில் இருந்து வர்த்தகர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை தொடங்கி உள்ளனர். இதனால் மீண்டும் சர்வதேச சந்தையில் நம் நாட்டில் உற்பத்தியான அரிசி நுழைந்தது.
பாகிஸ்தானுக்கு பாதிப்பு
இதனால் தற்போது பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கும் செல்லும் அரிசி சதவீதம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் சர்வதேச சந்தையில் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி 40.5% வரை சரிந்துள்ளது.
பாகிஸ்தான் புள்ளியியல் பணியகம் (PBS) வெளியிட்ட டேட்டாவின்படி, '' பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 50.8% சரிந்து 827.8 மில்லியன் டாலராக உள்ளது. இதன் மொத்த அளவு ஓராண்டுக்கு முன் 3.15 மில்லியன் டன்களிலிருந்து 2.0 மில்லியன் டன்களாக குறைந்தது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதியும் 6.62% குறைந்து 477.7 மில்லியன் டாலராக உள்ளது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 487,278 டன்களிலிருந்து 436,484 டன்களாகச் சரிந்துள்ளது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications