இஸ்லாமிய நாடுகளை மட்டும் நம்பினால் போதுமா? தனித்து விடப்படும் பாகிஸ்தான்! இது தேவைதான்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பாகிஸ்தான் அறிவிக்கப்படாத போரை தொடங்கியிருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் அந்நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய நாடுகள் கை கொடுக்கும் என்றாலும், இதை மட்டும் வைத்துக்கொண்டு பாகிஸ்தான் வளர்ந்துவிட முடியாது.
சர்வதேச நெருக்கடிகள் என்ன? பாகிஸ்தானுக்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன? உள்ளிட்டவற்றை இந்த செய்தி விவரிக்கிறது.

தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பாகிஸ்தான் ஆதரவளித்து வருகிறது என்பது சர்வதேச அளவில் பலமுறை நிரூபணமாகியிருக்கிறது. ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்தான். இப்போது பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களும் பாகிஸ்தானில் இருந்துதான் இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கின்றனர். தங்கள் பக்கம் இவ்வளவு தவறுகளை வைத்துக்கொண்டு, இந்தியா மீது தாக்குதல் நடத்தியிருப்பது பாக் செய்த வரலாற்று பிழை. இதற்காக உலக அளவில் அது தனிமைப்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டனங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை பாகிஸ்தானுக்கு அட்வைஸ் செய்திருக்கின்றன.
மற்றொருபுறம் பாகிஸ்தான் பெரிய நிதிச்சுமையில் சிக்கியிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் கடன்கள், அதற்கான வட்டி, கடனுக்காக சீனாவுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் என கரையான் அரித்த வீடாக பாக் மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது இந்தியா மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அந்நாட்டு கரன்சியின் மதிப்பு சரிவை கண்டிருக்கிறது. இன்றைய தேதியில் அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் கரன்சி 0.34% வரை சரிந்திருக்கிறது. இன்று ஒரு டாலர், 281.155 பாகிஸ்தான் கரன்சி என்கிற நிலைக்கு வந்திருக்கிறது.
ஏற்கெனவே இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க ஐஎம்எஃப்-இடம் கடன் வாங்க பாக் முயன்று வருகிறது. இந்த கடன் அப்ரூவல் ஆக இருந்த நிலையில், போர் காரணமாக கடன் கிடைக்காமல் போகலாம். மொத்தம் 7 பில்லியன் டாலர் கடன் கிடைக்க இருக்கிறது. இது ஏறத்தாழ தமிழ்நாட்டின் 7 ஆண்டு கால வருவாய்க்கு சமமானதாகும். இதில் முதல் கட்டமாக 1 பில்லியன் டாலர் விடுவிக்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் 6 பில்லியன் டாலர் இனி விடுவிக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான்.
மூன்றாவதாக, ராணுவத்திற்கு அதிக செலவும் அரசு மீது நம்பிக்கையின்மையும் ஏற்படும். அதாவது, பாகிஸ்தான் ராணுவம் சீனாவின் வான் பாதுகாப்பு தடுப்பு அம்சத்தை பயன்படுத்தி வருகிறது. நேற்று நாம் நடத்திய தாக்குதலில் இது அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு இது கடுமையான அதிர்ச்சி செய்தியாகும். அதேபோல இதை சரிக்கட்ட கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும். இதெல்லாம் தேவையில்லாத தலைவலி.
பாக் நடத்திய தாக்குதல், சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் அந்நாட்டு வீரர்கள் பங்கேற்பதை தடுக்கும். ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்கேற்பது தடைபட வாய்ப்பு இருக்கிறது. இந்த தடைகளை மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா ஆதரவு நாடுகள் பின்பற்றினாலும் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கலாம். இது மட்டுமே அந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டு விடாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications