பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.. கோயில் திறப்பு விழாவில் தலைமை நீதிபதி பேச்சு
பாகிஸ்தானில் இந்து கோயிலை திறந்து வைத்தார் சுப்ரீம்கோர்ட் நீதிபதி
காபூல்: . பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் மற்ற மதங்களை கடைப்பிடிப்போருக்கும் இருக்கும் எல்லா உரிமைகளும் இந்துக்களுக்கும் நிச்சயம் உண்டு" என்றார்.
பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே வருகிறது.. குறிப்பாக பெண்களை மதமாற்றம் செய்வது அதிகமாக நடந்து வருகிறது. அதேபோல மத ரீதியான வன்முறைகளும் பெருகி வருகின்றன.
அப்படித்தான், கைபர் பக்துங்வா பகுதியில் தேரி என்ற கிராமத்தில் ஸ்ரீ பரம ஹன்ஸ் மகாராஜ் கோயிலை சிலர் கடந்த வருடம் சூறையாடினர். இது பழமையான பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

தாக்குதல்
ஜாமியாத் உலெமா - இ -இஸ்லாம் என்ற அமைப்பை சேர்ந்தவர்களின் முன்னிலையில், சில கும்பல்கள் இந்த கோயிலை தாக்கியதாக கூறப்பட்டது.. இது அப்போது மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்திய நிலையில் கண்டனங்களையும் தாங்கி வந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.. அப்போது, இது தொடர்பான வழக்கு விசாரணையும் மும்முரமாக நடந்து வந்தது..

வாதம்
இறுதியில் சூறையாடப்பட்ட அந்த கோயிலை மறுபடியும் கட்டமைக்கும்படி தலைமை நீதிபதி குல்சார் அகமது உத்தரவிட்டிருந்தார்.. மேலும் இது தொடர்பாக மறுநிர்மாண பணிக்கான பணத்தையும் வசூலிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி, கோயிலை மறுகட்டமைப்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வந்தன.. இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மறுபடியும் பக்தர்களுக்கு கோயில்கள் திறந்துவிடப்பட்டுள்ளது..

கோயில் திறப்பு
இத்திறப்பு விழாவில் பங்கேற்க அவருக்கு பாகிஸ்தான் இந்து கவுன்சில் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.. இதையடுத்து. தீபாவளி பண்டிகையை கொண்டாடவும், இந்துக்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்கவும் இந்த விழாவில் நீதிபதி கலந்து கொண்டார்.. கோயிலையும் திறந்து வைத்தார். இதற்காகவே பிரத்யேகமாக விழா சிறப்பாக நடத்தப்பட்டது..

சிறுபான்மையினர்
கோயிலில் தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட்டது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமதுவுக்கு குரானும், டர்பனும் (தலைப்பாகை) பரிசாக அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது: "சிறுபான்மையினரின் உரிமைகள் மிகவும் முக்கியமானது.. அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்நாட்டின் உச்சநீதிமன்றம் எப்போதுமே பக்கபலமாக இருந்து வருகிறது.. அதன்படியே நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

உரிமைகள்
எதிர்காலத்திலும் சிறுபான்மையினர் உரிமைகளை அப்படியே பாதுகாப்போம்.. நாட்டின் சிறுபான்மை சமூகத்தினரின் மத உரிமைகள் பாதுகாக்கப்படுவதை சுப்ரீம்கோர்ட் உறுதி செய்யும்.. மதமாற்று மதத்தவரின் வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தும் அதிகாரம் யாருக்குமே இல்லை.. பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் மற்ற மதங்களை கடைப்பிடிப்போருக்கும் இருக்கும் எல்லா உரிமைகளும் இந்துக்களுக்கும் நிச்சயம் உண்டு" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications