பாகிஸ்தானின் கதை முடியுது.. அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்ட பலுசிஸ்தான்.. இந்த ஒப்பந்தத்தை பாருங்க
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டின் வளங்களை ஏற்கனவே சீனா அள்ளி செல்லும் நிலையில் இப்போது பாகிஸ்தான், அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது அரிய கனிமங்கள் சார்ந்தது. இதன்மூலம் அரிய கனிமங்கள் நிறைந்து காணப்படும் பாகிஸ்தானின் பலுசிஸ்தானை அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளதோடு, பாகிஸ்தான் பெரும் பிரச்சனையில் சிக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சீனாவிடம் அதிகளவில் கடன் வாங்கி உள்ளது. இது போதாது என்று உலக வங்கி உள்பட பல சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கடன் வாங்கும் முயற்சியில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

இப்படி நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் தற்போது அந்த நாட்டில் கனிம வளங்கள் நிறைந்து காணப்படும் பலுசிஸ்தானை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
பலூசிஸ்தான் கனிம வளங்கள்
அதாவது, பாகிஸ்தானில் உள்ள பெரிய மாகாணமாக பலூசிஸ்தான் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. சீனா - பாகிஸ்தான் பொருளாதார காரிடார் திட்டத்தின் ஒரு பகுதியாக பலூசிஸ்தானின் கனிமவளங்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றன.
இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி தனிநாடும் கோரி வருகின்றனர்.
அமெரிக்கா - பாகிஸ்தான் ஒப்பந்தம்
இந்நிலையில் தான் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதன்படி பாகிஸ்தானில் கனிமவளத்துறை, எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அமெரிக்காவுக்கு கதவுகள்திறந்து வைக்கப்பட்டுள்ளளது. அதன்படி தற்போது புதிய டீல் கையெழுத்தாகி உள்ளது.
ரூ.432 கோடி டீல்
இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் U.S. Strategic Metals (USSM) என்ற நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் Frontier Works Organization (FWO) இடையே கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தப்படி அமெரிக்க நிறுவனம் பாகிஸ்தானில் ரூ.432 கோடி (500 மில்லியன் டாலர்) முதலீடு செய்யும் வகையில் உள்ளது.
ஒப்பந்தத்தின் நோக்கம்
இந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் அமெரிக்காவில் பாலிமெட்டாலிக் ரிபைனரியை நிறுவ உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் எரிசக்தி துறைக்கு தேவையான கனிமங்களை சுத்திகரித்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இனி பாகிஸ்தானில் உள்ள கனிம வளங்களை இந்த நிறுவனம் சுத்திகரித்து அமெரிக்காவுக்கு அள்ளி செல்லும்.
80 வகையான கனிமங்கள்
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் பலூசிஸ்தானில் தான் அதிகளவில் கனிமவளங்கள் குவிந்து உள்ளன. இங்கு மொத்தம் 80 வகையான கனிமங்கள் உள்ளதாக க கூறப்படுகிறது. இதில் 50 கனிமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இனி இந்த கனிமங்களை அமெரிக்கா நிறுவனம் அள்ளிச்செல்லும்.
அடகு வைத்த பாகிஸ்தான்
இதனால் தான் அமெரிக்காவிடம் பலூசிஸ்தானை பாகிஸ்தான் அடகு வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பாகிஸ்தானின் இத்தகைய ஒப்பந்தம் அந்த நாட்டை பெரும் சிரமத்தில் தள்ளும். ஏனென்றால் ஒரு நாடு மீளமுடியாத நெருக்கடியில் சிக்கும்போது அந்த நாடுகளில் உள்ள வளங்கள் தான் கைக்கொடுக்கும்.
ஆனால் பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவிடம் கனிமவளங்களை தாரை வார்த்தது. இப்போது அடுத்தக்கட்டமாக கனிம வளத்துறையில் அமெரிக்க நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இதனால் எதிர்காலத்தில் பாகிஸ்தானின் நிலைமை மிகவும் மோசமாகலாம் என்று எக்ஸ்பர்ட்டுகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications