IMFல் கடன் வாங்கிவிட்டு.. இப்போ பாகிஸ்தான் செய்யும் வேலையை பாருங்க.. கையேந்தும் நிலைக்கு வந்துடுச்சே!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்க உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த 24 மணி நேரத்தில் கடன் பெற பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக அந்நாட்டிற்கு கடன் கிடைக்காமல் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

donald trump pakistan Jammu Kashmir

பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெறுவது வழக்கம். கடந்த 2 வாரம் முன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றது. பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை பாகிஸ்தான் நாடியது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவால் எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. இதனை அடுத்து தங்களுக்கு உடனடியாக 8500 கோடி ரூபாய் கடன் வழங்க ஐ எம் எப் ஒப்புதல் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு அதிக நிதியை வழங்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிதி வழங்க ஒப்புக்கொண்டு வாக்களித்தது. இதன் காரணமாக இந்தியாவின் ரூ.500 கோடி நிதி உட்பட 8,500 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்.

மீண்டும் கடன்

சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்க உள்ளது. 2024-25 நிதியாண்டில் பாகிஸ்தானின் பொருளாதாரம் வெறும் 2.68% மட்டுமே வளர்ச்சியடைந்தது. இது அதன் இலக்கான 3.6% ஐ விடக் குறைவு.

நாட்டின் பொருளாதார உற்பத்தி 411 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது, தனிநபர் வருமானம் 1,824 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. ஆனால் இது வைக்கப்பட்ட டார்கெட்டை விட பல மடங்கு குறைவு. முதல் மூன்று காலாண்டுகளில் விவசாயம் 1.8 சதவீதம் வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் தொழில்துறை துறை 1.14 சதவீதம் சரிந்தது. இதெல்லாம் வளர்ச்சி என்று பார்த்தாலும் டார்கெட்டை விட குறைவு.

அடுத்த நிதியாண்டில் (FY2025-26) வெளி நாடுகளிடம் இருந்து பொருளாதாரத்தை சமாளிக்க பாகிஸ்தான் கடன் வாங்க உள்ளது. 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட பாகிஸ்தான் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன் நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக கடன் வாங்க உள்ளனர். கடுமையான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல், வணிக வங்கிகளிடமிருந்து 7-8 சதவீத வட்டி விகிதத்தில் 2.64 பில்லியன் அமெரிக்க டாலர்களை குறுகிய கால கடன்களாகப் பெற பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வணிக வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடனாக 2.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. இதற்காக பாகிஸ்தான் சார்பாக நான்கு முக்கிய சர்வதேச வங்கிகளைத் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி மற்றும் துபாய் இஸ்லாமிய வங்கியிடமிருந்து தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற விரும்புகிறது. சீன தொழில்துறை மற்றும் வணிக வங்கியிடமிருந்து (ICBC) 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக திட்டமிட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+