For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவை ஆச்சர்யப்படுத்திய பாகிஸ்தான்.. கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை.. மாஸ் முயற்சி!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பாகிஸ்தானின் மருந்துபொருள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தான் தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஎச்) ஒரு அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிஆர்பி) மறுசீரமைப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி Ad5-nCoVக்கு மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைக்கு "முறையான ஒப்புதல்" கிடைத்துள்ளது. சீனாவின் CanSinoBio மற்றும் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி (BIB) ஆகியற்றால் உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானில் எந்தவொரு தடுப்பூசிக்கும் முதல்முறையாக மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை இதுதான்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மட்டுமல்ல பல நாடுகளிலும் கன்சினோ பயோ மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறது. . ஏற்கனவே சீனா, ரஷ்யா, சிலி, அர்ஜென்டினாவிலும் 3ம் கட்ட பரிசோதனை நடத்தி வருகிறது. விரைவில் சவூதி அரேபியாவில் தொடங்க உள்ளது. பாகிஸ்தானிலும் தற்போது தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் இதயம்.. திருச்சி 2-வது தலைநகராக வரவேண்டும்.. எம்ஜிஆர் விரும்பிய திட்டம் -திருநாவுக்கரசர்தமிழகத்தின் இதயம்.. திருச்சி 2-வது தலைநகராக வரவேண்டும்.. எம்ஜிஆர் விரும்பிய திட்டம் -திருநாவுக்கரசர்

கன்சினோ பயோ தடுப்பூசி

கன்சினோ பயோ தடுப்பூசி

"பாகிஸ்தானில் கன்சினோ பயோ (CanSinoBIO) உருவாக்கிய Ad5-nCoV என்ற கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைக்கு ஒத்துழைப்பதற்காக AJM பார்மா தலைமை நிர்வாக அதிகாரி அட்னான் உசேன் கடந்த மாதம் பாகிஸ்தான் தேசிய சுகாதார நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கராச்சியில் நடக்கிறது

கராச்சியில் நடக்கிறது

கராச்சியில் உள்ள சிந்து மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று டிராப் மருத்துவ ஆய்வுக் குழு செயலாளர் ஷப்காத் உசேன் டேனிஷ் கூறியிருக்கிறார்.
சீன நிறுவனத்துடன் இணைந்து கராச்சியின் சர்வதேச வேதியியல் மற்றும் உயிரியல் அறிவியல் மையம் இந்த சோதனை மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தானின் டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

எவ்வளவு மருந்து தரப்போகிறார்கள்

எவ்வளவு மருந்து தரப்போகிறார்கள்

கராச்சியைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.. சோதனை 56 நாட்களில் நிறைவடையும், இதன் போது செயலற்ற வைரஸின் மூன்று ஊசி மருந்துகள் ஆண் மற்றும் பெண் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும். தேசிய தரவு பாதுகாப்பு கண்காணிப்புக் குழு நோயாளிகளின் பாதுகாப்பை உன்னிப்பாகக் கண்காணித்து மாதாந்திர அடிப்படையில் அறிக்கைகளை சமர்ப்பிக்கும் என்று பாகிஸ்தான் தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு என்ன பலன்

பாகிஸ்தானுக்கு என்ன பலன்

பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி இதுபற்றி கூறுகையில், இது ஒரு பெரிய வளர்ச்சி. ஏனெனில் ஒரு வெற்றிகரமான சோதனை ஏற்பட்டால், தடுப்பூசி பாகிஸ்தான் மக்களுக்கு கிடைக்கும். வெவ்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும், உலகெங்கிலும் தடுப்பூசிகளுக்கு அதிக தேவை இருப்பதால் அவற்றை நாங்கள் பெறுவோமா என்று நிச்சயமாக சொல்ல முடியாது. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்தால், தடுப்பூசி மலிவு விலையில் எங்களுக்கு எளிதாக கிடைக்கும், "என்று அந்த அதிகாரி கூறினார்.

அதிகரிக்கும் பாதிப்பு

அதிகரிக்கும் பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 617 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் செவ்வாயன்று நிலவரப்படி பாகிஸ்தானின் கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை 289,832 ஐ எட்டியுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் மேலும் 15 பேர் இறந்தனர், பாகிஸ்தான் முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை 6,190 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பாகிஸ்தான் நம்பிக்கை

பாகிஸ்தான் நம்பிக்கை

பாகிஸ்தானின் COVID-19 தொடர்பான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு மையத்தின் தலைவரான அமைச்சர் அசாத் உமர், தடுப்பூசி தொடர்பான சோதனைகள் வெற்றிகரமாக அமையும் என்று நம்புவதாகக் கூறினார். "இது வெற்றிகரமாக மாறக்கூடிய தடுப்பூசிகளில் ஒன்று என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனைகளில் பாகிஸ்தானால் பங்கேற்க முடியவில்லை. எவ்வாறாயினும், நாட்டிற்குள் சோதனைகளில் தன்னார்வலர்கள் பங்கேற்க ஒரு வாய்ப்பு இறுதியாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உமர் கூறினார்.

Recommended Video

    Covaxin முதல் சோதனை வெற்றி.. இரண்டாம் கட்ட சோதனைக்கு தயார் | OneindiaTamil
    இறுதி கட்ட பரிசோதனை

    இறுதி கட்ட பரிசோதனை

    சீனாவின் கன்சினோ பயோ (CanSinoBIO) உருவாக்கிய Ad5-nCoV என்ற கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட (இறுதி) மருத்துவ சோதனை மூலம் பெரியவர்களிடையே கொரோனா அறிகுறியை தடுக்க முடியுமா என்பதற்காக நடத்தப்பட உள்ளது. பங்கேற்கும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ .50,000 வழங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து ​​குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு விவரம் மிகவும் நன்றாக இருக்கிறது. எனினும், ஒவ்வொரு மருந்தும் லேசான காய்ச்சல், சோர்வு, தலைவலி அல்லது ஒவ்வாமை போன்ற ஒரு சதவீத நிகழ்வுகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றார்

    English summary
    “formal approval” from the Drug Regulatory Authority of Pakistan (DRAP) for phase-III Clinical Trial of Recombinant Novel Coronavirus Vaccine Adenovirus Type 5 vector (Ad5-nCoV) developed by CanSinoBio and Beijing Institute of Biotechnology China (BIB)”.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X