இந்தியாவுக்கு கொடுத்த மாதிரி பதிலடி! ஆப்கானிஸ்தானுக்கு இதுதான் எச்சரிக்கை.. காமெடி செய்த பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானை எச்சரிப்பதாக கூறி காமெடி செய்துள்ளது பாகிஸ்தான். 'இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்தது போல ஆப்கானிஸ்தானுக்கும் கொடுக்க இருப்பதாகவும், அப்போதுதான் பாகிஸ்தானை தீங்கிழைக்கும் பார்வையுடன் பார்க்க அந்த நாடு துணியாது" என்றும் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின் போது சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவிடம் கேட்டு சண்டை நிறுத்தம் செய்த பாகிஸ்தான், அதன்பிறகு தொடர்ச்சியாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு வருகிறது.

pakistan-warns-afghanistan-of-befitting-reply-similar-to-india

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் மோதல் உச்சம் பெற்றுள்ளது. தங்கள் நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.

காபூலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்குத் பதிலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்தரப்பு (பாகிஸ்தான்) மீண்டும் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறினால், தங்கள் நாட்டை பாதுகாக்க ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

நெருப்புடன் விளையாடுகிறார்கள்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றுள்ள இந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த மோதலுக்கு நடுவே தேவையில்லாமல் இந்தியாவை இழுத்து பேசி உள்ளது பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் என தெரிவித்துள்ளது. "ஆப்கானிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம்" என்று கூறிவிட்டு தேவையில்லாமல் இந்தியாவை இழுத்து கொண்டுள்ளது பாகிஸ்தான்.

அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ரத்தத்துடனும் நெருப்புடனும் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டதைப் போல் தக்க பதிலடி ஆப்கானிஸ்தானுக்கு கொடுக்கப்படும். அப்போதுதான் தீய கண்ணோட்டத்துடன் பாகிஸ்தானை பார்க்கும் துணிச்சல் அந்த நாட்டிற்கு இனிமேலும் வராது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாலிபான்கள் தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தகர்த்து எறிந்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் இந்தியாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்த முயன்றது.

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அவர் ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்கள் மீது குறிவைத்தது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பின் மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் விமான படை தளங்களையும் நொறுக்கியது. மூன்று நாட்கள் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடித்த நிலையில், இந்தியாவின் அதிரடியை சமாளிக்க முடியாமல் சண்டை நிறுத்தம் செய்யுமாறு பாகிஸ்தான் கோரியது.

பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு

இதனால் இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் பொது வெளியில், பாகிஸ்தான் தங்களை வெற்றியாளர்களாக காட்டிக்கொள்ள முயற்சி செய்துள்ளது. பல முறை பாகிஸ்தானின் பொய்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அப்போது திருந்தாத பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவைப் பற்றி விமர்சனமாக பேசியுள்ளது.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் கடும் சண்டை நடந்துள்ளது. எல்லையை அத்துமீறினால், அவர்களுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தங்கள் மண்ணை பயங்கரவாத சக்திகள் பயன்படுத்த அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+