இந்தியா தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்.. திருப்பி தாக்குவோம்.. இம்ரான் கான் கடும் எச்சரிக்கை!
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உடனே நாங்களும் திருப்பி தாக்குவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உடனே நாங்களும் திருப்பி தாக்குவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் தற்போதுதான் இம்ரான் கான் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

என்ன பயன்
இம்ரான்கான் தனது பேட்டியில், இந்தியா மீது நடந்த தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன். எங்கள் நாடு இப்போது நிலையான தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இப்போது எங்களை ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள். எங்கள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுகிறீர்கள்.

உதவி
எங்கள் நாட்டிலும் லட்சக்கணக்காக பாகிஸ்தான் மக்கள் சண்டையிட்டு சாகிறார்கள். அதற்கு யார் பொறுப்பேற்பது. உங்களுக்கு நாங்கள் உதவ வேண்டும் என்றால் உதவுவோம். இந்தியாவிற்கு தேவையான எல்லா விதமான உதவியையும் பாகிஸ்தான் அளிக்கும். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

இந்தியாதான் காரணம்
ஆனால் ஒன்று சொல்கிறேன். இந்த சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் உயிரை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களை இந்திய ராணுவம் மோசமாக நடத்தி இருக்கிறது. அதுதான் அவர்கள் இப்போது கோபம் கொள்ள செய்து உள்ளது. அங்கு இந்திய ராணுவம் செய்த வன்முறைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

போர் செய்யலாம்
இரண்டு நாடுகள் போரை தொடங்குவது எளிதான காரியம்தான். ஆனால் போரை முடிப்பது மனிதர்கள் கையில் இல்லை: கடவுள் கையில்தான் இருக்கிறது. நாம் போரை நிறுத்த முடியாது. பேச்சுவார்த்தையில் அனைத்தையும் சரி செய்யலாம். உங்களுக்கு இது தேர்தல் வருடம். இப்போது வன்முறை சரியாக இருக்காது. ஆனால் நீங்கள் தாக்கினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உடனே நாங்களும் திருப்பி தாக்குவோம், என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications