துபாயில் டிரம்ஸ் கலைஞரை குத்திக் கொன்ற பாகிஸ்தான் பாடகருக்கு 10 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் டிரம்ஸ் கலைஞரை குத்திக் கொன்ற பாகிஸ்தானிய பாடகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

துபாயில் உள்ள ஜெபல் அலி என்ற இடத்தில் இருக்கும் ஊழியர்கள் முகாமில் கடந்த 2009ம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் பாடிக் கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்த ஒருவரை டிரம்ஸ் வாசித்த கலைஞர் வரவேற்கவில்லை என்று கூறிய பாடகர் அவருடன் தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ஸ் கலைஞர் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறி தனது அறையில் தூங்க சென்றார். இதையடுத்து அந்த பாடகர் டிரம்ஸ் கலைஞரின் அறைக்கு சென்று அவரை கத்தியால் குத்த முயன்றார். டிரம்ஸ் கலைஞர் அங்கிருந்து தப்பியோடி மாடிப்படியில் ஏறினார். பாடகரோ அவரை பின்தொடர்ந்து குத்திக் கொலை செய்தார்.

இதையடுத்து அந்த பாடகர் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார். அவரது சகோதரரை பிடித்து விசாரித்த போலீசார் பாகிஸ்தானில் இருந்து அந்த பாடகரை துபாய்க்கு அழைத்து வந்தனர். தற்போது அந்த பாடகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+