அந்தரங்க புகைப்படங்கள்.. வீடியோக்கள் ஆன்லைனில் லீக்.. பாக். பாடகி அதிர்ச்சி.. எடுத்த திடீர் முடிவு
லாகூர் : அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் கசிந்ததால் பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஸாடா பொழுதுபோக்கு துறையைவிட்டு (ஷோபிஸ்) மொத்தமாக விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை கொடிய விஷப்பாம்புகளை வைத்து கொல்லப்போவதாக டுவிட்டரில் தான் பாம்புகள் இருக்கும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் பாகிஸ்தான் பாப் பாடகி ரபி பிர்ஸாடா.
இதற்காக பாகிஸ்தான் போலீசார் அப்போதே ரபி பிர்ஸாடா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை விடுவித்தனர்.

ஜாக்கெட்டில் குண்டு
இந்நிலையில் அண்மையில் வெடிகுண்டுகள் நிறைந்த ஜாக்கெட்டை அணிந்தபடி டுவிட்டரில் மீண்டும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது மோடியை ஹிட்லர் என்றும் தான் காஷ்மீரின் மகள் என்றும் கூறியிருந்தார். இதற்கு இந்தியர்கள் பாடகி ரபி பிர்ஸாடாவுக்கு அப்போதே தக்க பதிலடி கொடுத்தனர்.
|
வெளியேறுகிறேன்
இதனிடையே ரபி பிர்ஸாடா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் "நான், ரபி பிர்ஸாடா ஷோபிஸை விட்டு ( பொழுதுபோக்கு துறையை விட்டு) வெளியேறுகிறேன். அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பார். மேலும் எனக்கு ஆதரவாக மக்களின் இதயங்களை மென்மையாக்குவார்" என்று கூறியுள்ளார்.
|
அந்தரங்க வீடியோக்கள்
பாகிஸ்தான் பாப் பாடகியான ரபி பிர்ஸாடா இதன் மூலம் இனிமேல் மேடைகளில் பாடல்களை பாட மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளார். தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் லீக் ஆனதால் இந்த முடிவினை பிர்ஸாடா எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிரடி முடிவு
அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதை வைத்து பலரும் ரபி பிர்ஸாடாவை சமூக வலைதளங்களில் தொடர்ந்து நையாண்டி செய்துவருகின்றனர். மேலும் பலர் பாடகி ரபியை மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் தான் அவர் தான் இவ்வளவு நாளாக செய்து இருந்த ஷோபிஸ் துறையைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தள்ளார்.












Click it and Unblock the Notifications