முதலில் கனடா, இப்போ இத்தாலி.. வரிசையாக அசிங்கப்படும் பாகிஸ்தான்.. வெளிநாட்டில் இப்படி செய்யலாமா
ரோம்: பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தங்கள் தாய்நாட்டிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். முதலில் கனடாவில் இதுபோல அவர்கள் செய்த நிலையில், இப்போது இத்தாலியிலும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்த காலத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பலரும் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டிற்குச் செல்வது சர்வ சாதாரணமாகி இருக்கிறது. வெளிநாட்டிற்குச் செல்லும் அவர்கள் தங்கள் வேலை முடிந்த உடன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிடுவார்கள்.

ஆனால், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சையைக் கிளப்புவதாக மட்டுமில்லை தாய் நாட்டையே தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறது.
பாகிஸ்தான் வீரர் மாயம்: அதேபோல ஒரு சம்பவம் தான் இந்த முறை இத்தாலியில் நடந்துள்ளது. அங்கே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் இத்தாலியில் ஒரு சக வீரரிடம் இருந்து பணத்தைத் திருடிவிட்டு மாயமாகி இருக்கிறார். இத்தகவலைப் பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காகப் பாகிஸ்தான் வீரர் ஜோஹைப் ரஷீத் இத்தாலி சென்றுள்ளார். அவர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டுத் தலைமறைவாகி இருக்கிறார். இது குறித்து இத்தாலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து இத்தாலி காவல்துறை அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது: ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க ஐந்து பேர் கொண்ட அணியில் ஜோஹைப் ரஷீத் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த ஆண்டு ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஆவர். பெண் குத்துச்சண்டை வீராங்கனை லாரா இக்ரம் பயிற்சிக்காக வெளியே சென்ற போது அவரது ரூமில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ரஷீத் மாயமாகி இருக்கிறார்.
இவர் இப்போது இத்தாலியில் எங்கே இருக்கிறார்.. என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பத குறித்த தகவல்கள் இல்லை. இருப்பினும், ரஷீத்தின் செயல் பாகிஸ்தானுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக என்று அந்நாட்டின் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் கர்னல் நசீர் அகமது தெரிவித்தார். அதேநேரம் தங்களுக்குச் சிறந்த எதிர்காலம் வேண்டும் என்பதற்காக பாக். நாட்டை சேர்ந்தவர்கள் இதுபோல வெளிநாடுகளில் மாயமாவது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
முதல்முறை இல்லை: அதேபோல சமீபத்தில் தான் பாகிஸ்தானில் இருந்து கனடா சென்ற கேபின் குழு உறுப்பினர்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மாயமானது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை சேர்ந்த விமானப் பணிப்பெண்கள் கனடா நாட்டில் சட்ட விரோதமாக இருக்க மாயமாகி இருக்கிறார்கள். கடந்த ஒரே வாரத்தில் இரண்டு பேர் இதுபோல மாயமானது. இதில் ஒறு விமானப் பணிப்பெண் பாகிஸ்தான் ஏர்லைன் சீருடையை வைத்துவிட்டு "நன்றி, PIA" என்ற எழுதிச் சென்றிருந்தார்.
தங்கள் சொந்த நாட்டில் நல்ல எதிர்காலம் கிடைக்காது என நினைப்பவர்கள் தான் இதுபோல மாயமாகிவிடுவார்கள். கனடா சட்டப்படி அந்நாட்டின் எல்லைக்குள் ஒருவர் வந்துவிட்டாலே போதும்.. அவர்களால் அகதிகளாகத் தங்கப் புகலிடம் கோர முடியும். அப்படி அகதிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் பணிப்பெண்கள் கனடாவில் மாயமானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications