“இந்தியாவுக்கு எதிராக யாரெல்லாம் சண்டை செய்வீங்க?” மௌனம் சாதித்த பாகிஸ்தானியர்கள்! நிலைமை இதுதான்
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையில் போர்ச்சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக யாரெல்லாம் சண்டையிடுவீர்கள் என்று அந்நாட்டு மதகுரு எழுப்பிய கேள்விக்கு பாகிஸ்தானியர்கள் மௌனமாக இருந்திருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மன நிலையையும் இது பிரதிபலிப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில், மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் காஸி என்பவர் தனது மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பிரசங்கம் செய்து வந்தார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள மோதல் போக்கை சுட்டிக்காட்டி, போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு எதிராக யார் சண்டை செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. கனத்த மௌனம் நிலவியது. மட்டுமல்லாது தனது சொந்த நாட்டு ராணுவத்தையே அவர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்திருக்கிறார்.
பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா போன்ற பகுதிகளில் ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது என்றும், உரிமைகளுக்காக போராடும் மக்களை தீவிரவாதிகளாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களை குற்றவாளிகளாகவும் பாகிஸ்தான் ராணுவம் அடையாளப்படுத்துகிறது என்றும் விமர்சித்திருக்கிறார். இவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் என்றும் இவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. பாகிஸ்தானில் யதார்த்தம் இதுதான். தனது சொந்த நாட்டு மக்களுக்காக ராணுவத்தை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கும்போது அந்நாட்டு ராணுவம் எப்படி இந்தியாவுடன் வீரியமாக களத்தில் இறங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
பாக் ராணுவம் விமர்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் நிறைய முறை அந்நாட்டு ராணுவம் சர்வதேச அளவில் பல்ப் வாங்கியிருக்கிறது. இதற்கு மற்றொரு சமீபத்திய உதாரணம், ஐநா மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கைதான். இந்த அறிக்கையில்,
"வடமேற்கு மாநிலமான பலூசிஸ்தானில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருகிறது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளூர் போலீசும், தேசிய ராணுவமும் திறம்பட செயல்படவில்லை. இதனால் அங்கு சட்டவிரோத செயல்கள் நிறைய நடக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் காணாமல் போகிறார்கள். இதில் ராணுவத்திற்கும் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே காணாமல் போனவர்களை தேடும் பணி உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
உரிமைக்காக போராடுபவர்களின் குரலை ராணுவம் நசுக்க கூடாது. இந்த பகுதியில் அனைவரும் ஒற்றுமையாக வாழ ராணுவம் உதவ வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். கட்டாய திருமணங்கள், பாலியல் அத்துமீறல்கள், கொலைகள் போன்றவற்றை சட்டமும், அதை தடுக்க வேண்டியவர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சரமாரியாக வறுத்தெடுத்திருந்தது.
இப்போது அந்நாட்டின் மதகுருவும் இதே போன்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது பாகிஸ்தான் மீது கரிசனம்தான் வருகிறது என்று பலரும் கூறுகின்றனர்.
-
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications