For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீசையில் மண் ஒட்டாத இம்ரான்கான்.. " இந்தியாவை விட பாகிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை".. தடாலடி பேச்சு

இந்திய பொருளாதாரத்தை விமர்சித்துள்ளார் இம்ரான்கான்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: மற்ற நாடுகளை விட, அதிலும் இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது" என்று பாகிஸ்தானின் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக, பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது.. கட்டுக்கடங்காத பணவீக்கம், நடப்புக் கணக்கு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் பண மதிப்பிழப்புகள் இருந்துள்ளன.

வைகுண்ட ஏகாதசி விரதம் : பட்டினி கிடந்து பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? வைகுண்ட ஏகாதசி விரதம் : பட்டினி கிடந்து பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இதனால் அந்த நாட்டில் சிக்கல்கள் பெருகி வருகின்றன.. என்ன செய்வதென்று தெரியாமல் இம்ரான் விழித்து கொண்டிருக்கிறார்..

நிதியுதவி

நிதியுதவி

ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை உருவாகிவிட்டது.. உலக நாடுகளின் நிதியுதவியும் கிடைப்பதில்லை.. மக்கள் வரி கட்டாததால்தான், நாடு பெரும் நெருக்கடியை நோக்கி செல்கிறது, அதனால், சொத்து கணக்குகளை மக்கள் வெளியிட வேண்டும் என்று இம்ரான்கான் ஒருமுறை அறிவித்தார்.. அதுமட்டுமல்ல, அமெரிக்காவுக்கு கடந்த வருடம் இம்ரான் கான் சென்றபோது, சொகுசு ஓட்டலில் தங்காமல் தங்கள் நாட்டு தூதரகத்தின் விருந்தினர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் ரூமில் தங்கி சிக்கனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சிக்கனம்

சிக்கனம்

பிறகு, அதிகாரபூர்வ அரசு இல்லத்தை நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விட்டு பணம் ஈட்டும் முயற்சியிலும் இறங்கினார்.. இப்படி எத்தனையோ சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை... இப்போது நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது..நிதி நெருக்கடியை சமாளிக்க, நட்புறவு நாடான சீனாவிடம் உதவி கேட்கலாமா என்ற யோசனையிலும் இம்ரான் கான் உள்ளதாக கூறப்படுகிறது.

 நெருக்கடி

நெருக்கடி

எனவே, அடுத்த மாதம் சீனாவுக்கு நேரிலேயே செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் 2 நாட்களுக்கு முன்பு செய்திகளும் வெளிவந்தன. அதேசமயம், இம்ரான்கானின் இந்த சீனா பயணம் இரு நாட்டு வர்த்தக இணைப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.. மேலும், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவி செய்ய சீனாவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

எனினும், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து அந்நாட்டு எதிர்க் கட்சியினரே குற்றம் சாட்டி வருகிறார்கள்... இம்ரான் கானை சரமாரியாக விமர்சித்தும் வருகிறார்கள்.. இந்த நிலையில் தான் இந்தியாவை பாராட்டி உள்ளார் இம்ரான்கான்.. பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் இந்தியாவை விட சிறப்பாக உள்ளது என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்... இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் இம்ரான்கான் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Imran Khan மீதே பழிபோட்ட Ex Wife Reham Khan! | OneIndia Tamil
     விலைமலிவு

    விலைமலிவு

    உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் பொருட்களின் விலை மலிவாகத்தான் இருக்கிறது.. மற்ற நாடுகளை விட பாகிஸ்தானில் எண்ணை விலை குறைவாகத்தான் இருக்கிறது.. என்னை இவர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்கிறார்களே, உண்மையை சொல்லப்போனால், எங்களது அரசாங்கம்தான் அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் இந்த நாட்டை காப்பாற்றியிருக்கிறது. என்னுடைய ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது... மற்ற நாடுகளை விட, அதிலும் இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளதார்.

    English summary
    Pakistans economy is better than India, says PM Imran Khan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X