பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட தடை! பல்கலைக்கழகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு! காரணம் இதுதான்!
இஸ்லாமாபாத்: இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு திடீரென்று பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஹோலிக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்துக்களின் பண்டிகையாக உள்ள ஹோலி மார்ச் மாதம் கொண்டாடப்படும். இந்த ஹோலி கொண்டாட்டத்தின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.
பனிக்காலத்துக்கு குட்பை சொல்லிவிட்டு வெயில் காலத்தை வரவேற்றல் என்பது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிக்கும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஆன்மிக ரீதியாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை விட வடஇந்திய மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசுவார்கள். இந்த சமயத்தில் ஏழைகள், பணக்காரர்கள் என்ற பாகுபாட்டை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் தான் பாகிஸ்தானில் திடீரென்று ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமாபாத்தில் உள்ள க்வாய்ட்-இ-ஆசாம் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 12ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடினர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவின் அடிப்படையில் தான் ஹோலி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‛‛இஸ்லாத்தின் கலாச்சாரம் மற்றும் தார்மீக விழுமியங்களை நிலைநிறுத்தும் வகையில் இளைஞர்களை மாற்றுவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. ஆனால் நாட்டின் சமூக-கலாச்சார விழுமியங்களை மீறுவதோடு, இஸ்லாமிய அடையாளத்தை பாதிக்கும் ஹோலி போன்ற பண்டிகையை கொண்டாடப்படுவதை பார்ப்பது வருத்தமாக உள்ளது. இது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது நாட்டின் நற்பெயருக்கு பாதகமானது. இதனால் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்'' எனக்கூறி தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையத்தின் இந்த அறிவிப்பு என்பது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications