பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாக்., ராணுவ அதிகாரி.. இவர் பயங்கரவாதியின் மகனாச்சே
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை பார்த்து கண்ணடித்த வீடியோ வெளியாகி சர்ச்சை கிளப்பி உள்ளது. அவரது செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு:
பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக இருப்பவர் அகமது ஷெரீப். இவர் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) பிரிவின் டைரக்டர் ஜெனரலாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ‛‛இம்ரான் கான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக உள்ளார். அவர் தற்போதைய அரசுக்கு எதிரானவர். அவர் இந்தியாவின் கையாளாக செயல்படுகிறார்'' என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் அகமது ஷெரீப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் பற்றி கேள்வி எழுப்பினார். அதாவது, சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான அவரது குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்வியை எழுப்பினார். அதற்கு ‛‛இம்ரான் கான் ஒரு மனநோயாளி'' என்று கூறிவிட்டு பெண் பத்திரிகையாளரை நோக்கி சிரித்துவிட்டு கண்ணடித்தார்.
இதனை பார்த்து பெண் பத்திரிகையாளர் ஷாக் ஆனார். மேலும் அகமது ஷெரீப் கண்ணடித்தது ங்கிருந்த பத்திரிகையாளர்களின் கேமராக்களில் வீடியோவாக பதிவானது. இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. நெட்டிசன் ஒருவர், ‛‛இது பாகிஸ்தான் ராணுவம் தொழில் பக்தி இன்றி செயல்படுவதை காட்டுகிறது. ராணுவ சீருடையில் உள்ள ஒருவர் எப்படி இப்படிப் பொதுவெளியில் கண்ணடிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவரோ, ‛‛பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இப்படி செயல்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை'' என்று கூறியுள்ளார். மேலும் சிலர் அவரை ‛‛பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்''
இப்போது சர்ச்சையில் சிக்கி உள்ள அகமது ஷெரீப் நம் நாட்டுக்கு எதிராக பொய்களை தொடர்ந்து கூறி வரும் நபர்களில் ஒருவர். எதற்கெடுத்தாலும் நம் நாட்டை குற்றம்சாட்டு புத்தி கொண்டவர். இம்ரான் கானுக்கும், நம் நாட்டுக்கும் எந்த தொடர்பு இல்லை. ஆனால் இம்ரான் கான் நம் நாட்டின் கையாள் என்று கூறியிருந்தார்.
மேலும் இவரது பின்னணியில் சர்ச்சைக்குரிய ஒன்றாக தான் உள்ளது. இவரது தந்தை சுல்தான் பஷிருதீன் மஹ்முத் ஒரு பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டவர். அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்ட அல்-கொய்தா த பயங்கரவாத அமைப்பின் நிறுவன தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனின் உதவியாளராக இருந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications