15 ஆண்டுகளில் 4-வது 'ஆபரேஷன்'!'வேற' முகம் காட்டிய ஹமாஸ் பாலஸ்தீனர்கள்! வெல்லுமா இஸ்ரேல் 'யூதர்' படை?
டெல் அவிவ்: 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஹமாஸ் பாலஸ்தீனர்கள் அல்லது ஹமாஸ் ஜிஹாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் 4 ஆபரேஷ்ன்களை ரத்த வெள்ளத்தினூடே மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேல் நிலப்பரப்பை உள்ளடக்கியதே எங்களது பாலஸ்தீனம் என்பது ஹமாஸ் ஜிஹாதிகளின் நிலைப்பாடு. காலப்போக்கில் கிழக்கு ஜெருசலேம், காஸா, மேற்கு கரை பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இல்லாமல் அமைப்பதை இலக்காக கொண்டது ஹமாஸ்.

1980களின் இறுதியில் உருவெடுத்து 2006-க்குப் பின் உக்கிரம் காட்டத் தொடங்கியது ஹமாஸ். தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பின் முன்னோடி ஹமாஸ். இஸ்ரேலின் ஒவ்வொரு நாள் தூக்கத்தையும் குழிதோண்டிப் புதைக்கிறது ஹமாஸ் இயக்கம்.
ஆபரேஷன் கேஸ்ட் லீட் : 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதேபோல ஹமாஸ் இயக்கமானது காஸா பகுதிகளில் இருந்து சரமாரி ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடி தருவதற்காக ஆபரேஷன் கேஸ்ட் லீட் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டது. இந்த யுத்தம் 22 நாட்கள் நீடித்தது. இதில் பாலஸ்தீனர்கள் பெருமளவில் 1,500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் பில்லர் டிபன்ஸ்: இதனையடுத்து 2012-ம் ஆண்டு இன்னொரு சீண்டல் நடவடிக்கையை ஹமாஸ் மேற்கொண்டது. அதற்கு பதிலடி தர இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் பெயர் ஆபரேஷன் பில்லர் டிபன்ஸ். இதில் ஹமாஸ் இயக்கம் பேரிழப்பை எதிர்கொண்டது. அதன் மூத்த தலைவர் அகமது ஜபாரியை ஹமாஸ் பறிகொடுத்தது. இதிலும் பாலஸ்தீனர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் புரோடெக்டிவ் எட்ஜ்: 2018-ல் இஸ்ரேல், ஹமாஸ் ஜிஹாதிகளை கைது செய்ய ராக்கெட் தாக்குதல்கள் மூலம் பதிலடி நடத்தியது. அப்போது இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பெயர் "ஆபரேஷன் புரோடெக்டிவ் எட்ஜ்". இந்த யுத்தம் சுமார் இரண்டரை மாதங்கள் அதாவது 50 நாட்கள் நீடித்தது. இப்பெரும் யுத்தத்தில் சுமார் 2,500 பாலஸ்தீனர்கள், 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் மாண்டு போயினர்.
Operation Swords of Iron: இதனைத் தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத உக்கிர தாக்குதலை ஹமாஸ் மேற்கொண்டது. 30 நிமிடங்களில் சுமார் 7,000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேலை நிலைகுலைய வைத்தது ஹமாஸ். இதற்கு பதிலாகவே 'Operation Swords of Iron' தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது இஸ்ரேல். இதுவரையில் இருதரப்பிலும் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த முறை யுத்தம் எத்தனை மாதம் நீடிக்கும் என்பது சொல்ல முடியாதது என்கின்றனர் ராணுவ ஆய்வாளர்கள் முன்னெப்போதையும்விட ஹமாஸ் இம்முறை உக்கிரம் காட்டி, ஒரு இறுதி யுத்தம் போல ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறது.. இதனால் இம்முறை யுத்தம் பல மாதங்களாக தொடரலாம் என்பதும் ராணுவ ஆய்வாளர்கள் கருத்து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications