புடின் வலது கரத்தோடு போலி நிறுவனங்களின் 'தாத்தா' பிரிக்ஸ் நடத்திய சந்திப்பு: பண்டோரா ஆவணத்தில் பகீர்
மாஸ்கோ: பிப்ரவரி மாதம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மிகவும் குளிரான காலங்களில் ஒன்றாகும். அப்போதுதான் 2015ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அக்கவுண்டன்ட் கிரேம் பிரிக்ஸ் அங்கே சென்று சேர்ந்தார். அங்கு அவர் ஹெர்மன் கிரெஃப்புடன் ஒரு ரெஸ்டாரண்ட்டில் சந்திப்பு நிகழ்த்தினார்.
ஹெர்மன் கிரெஃப் வேறு யாருமல்ல, ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான SberBank இன் தலைவராகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர்.
ஒருமுறை அவருடைய அமைச்சரகத்திலும் பணியாற்றினார். இந்த நிலையில்தான், தனது பெரும் செல்வத்தைப் பாதுகாக்க கிரெஃப்புக்கு பிரிக்ஸின் உதவி தேவைப்பட்டது.

பொருளாதார தடை
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்ஹெச் 17 ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, கிரெஃப் வங்கி சமீபத்தில் சர்வதேச தடைகளை சந்தித்தது. கிரெஃப்பிற்கு தனிப்பட்ட முறையில் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், அவரது வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை அவரையும் பாதித்து வாடிக்கையாளர்களை நெறுங்க விடாமல் செய்தது.

ரகசிய காப்பாளர்
ஆனால் கிரேம் பிரிக்ஸ் அப்படியானவர் அல்ல. ஒரு திறமையான கணக்காளர் அவர். பிரிக்ஸ் மற்றும் அவரது நிறுவனமான ஆசியாசிட்டி ஆகியவை, தங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை மட்டுமல்ல, அவர்களின் ரகசியங்களையும் பாதுகாப்பதற்காக நம்பிக்கைகள் மற்றும் நிதி கட்டமைப்புகளை உருவாக்கினார். பிரிக்ஸ் எப்போதும் சட்டத்தின் பக்கத்தில் இருக்க முடிந்தது. ஆனால், கிரேம் பிரிக்ஸ் மற்றும் மாஸ்கோ சந்திப்பின் விவரங்கள் உலக வரலாற்றின் நிதி ஆவணங்களின் மிகப்பெரிய கசிவுகளில் ஒன்றான "பண்டோரா பேப்பர்ஸ்" இல் உள்ளன.

மிகப்பெரிய முறைகேடுகள்
இந்த முறைகேடுகளை கண்டறிந்த ICIJன் கருத்துப்படி இந்த ஆவணங்கள் ரொம்பவே அதிகமாகும். இந்த முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் அச்சிடப்பட்டு அடுக்கப்பட்டிருந்தால் அவை சிட்னியின் மைய கோபுரத்தை விட நான்கு மடங்கு உயரமாக இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால், 14 உலகளாவிய கார்ப்பரேட் சேவை நிறுவனங்களிலிருந்து கசிந்த 11.9 மில்லியன் கோப்புகள்தான், பண்டோரா ஆவணங்கள் ஆகும். அவை சுமார் 29,000 ஆஃப்-தி-ஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் தனியார் அறக்கட்டளைகள் தொடர்பானவை.

சிறு வயதிலிருந்தே குறிக்கோள்
பிரிக்ஸி மிகவும் புத்திசாலிப் பையனாக இருந்தார். கணிதத்தில் மிகவும் சிறப்பான திறமை கொண்டவராக இருந்தார், என்கிறார், எச்சுகா உயர்நிலைப் பள்ளியின் பள்ளி நண்பர் கிரஹாம் பீட். "அவர் 30 வயதிற்கு முன்பே ஒரு மில்லியனராக இருக்க விரும்பினார்" என்கிறார் அவர். பிரிக்ஸ் 23 வயதில் பட்டயக் கணக்காளராகப் பயிற்சி பெறத் தொடங்கினார். 30 வயது வாக்கில், அவர் தனது சொந்த நிறுவனமான ஆசியாசிட்டியை நிறுவினார். 1980களில், ஆசியாசிட்டி சிறிய தீவு நாடுகளில் வணிக நிறுவனங்களை திறக்கத் தொடங்கியது, அங்கு சர்வதேச வணிகத்திற்கான வரிச் சட்டங்கள் தளர்வானவை மற்றும் ரகசிய சட்டங்கள் வசதியாக இருந்தது இதற்கு காரணம்.

வரி ஏய்ப்பாளர்கள் சொர்க்கம்
தனது வாடிக்கையாளர்களுக்கு, மற்றவர்கள் கவனிக்காத ஒரு தீவு நாட்டில் முதலீடு செய்யுமாறு பிரிக்ஸ் ஊக்குவித்தார். அந்த நாடுதான் சமோவா. பசிபிக் நடுப்பகுதியில், ஒரு வரி சொர்க்கம் அது. பண்டோரா லீக்கில் வெளியான தகவல்படி, ஒரு மின்னஞ்சலில், சமோவானைச் சேர்ந்த ஒருவர் பிரிக்ஸை போலி நிறுவன தொழிலின் "தாத்தா" என்று வர்ணித்தது தெரிய வருகிறது. அந்த அளவுக்கு, சட்ட வரி ஏய்ப்பு நிறுவனங்களின் நிபுணராக இருந்தவர் அவர். இப்படியான ஒருவரின் ரகசியங்களும் அவருடன் புடின் ஆதரவாளர் நடத்திய சந்திப்பும் பண்டோரா ஆவணத்தில் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications