என் அப்பாவை திருப்பிக் கொடுங்க: மாயமான ஏர்ஏசியா விமான கேப்டனின் மகள் உருக்கம்
ஜகர்தா: அப்பா வீட்டுக்கு வாருங்கள் என்று மாயமான ஏர் ஏசியா விமானத்தின் கேப்டன் இரியான்டோவின் மகள் ஏஞ்சலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள ஜுவான்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இந்நிலையில் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடல் பணியும் துவங்கியுள்ளது.

விமானத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த இரியான்டோ ஓட்டினார். அவர் இதுவரை 6 ஆயிரத்து 100 மணிநேரம் விமானம் ஓட்டியவர். துணை விமானியான பிரான்சைச் சேர்ந்த இம்மானுவல் ப்ளெசல் 2 ஆயிரத்து 275 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர்.
இந்நிலையில் கேப்டன் இரியான்டோவின் மகள் ஏஞ்சலா சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது,
அப்பா திரும்பி வந்துவிடுங்கள். எனக்கு நீங்கள் வேண்டும். என் அப்பாவை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்பா வாங்க நான் உங்களை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இரியான்டோவுக்கு மனைவி மற்றும் பள்ளி செல்லும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி வேலை பார்க்கவில்லை.
மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 16 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 155 பயணிகள் இருந்தனர். பயணிகளில் 149 பேர் இந்தோனேசியர்கள், 3 பேர் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர், ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications