டெல்லியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் பயணி மரணம்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: டெல்லியில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் டெல்லியில் இருந்து சிங்கப்பூர் கிளம்பியது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. பயணி இறந்ததால் விமானம் எங்கும் அவசரமாக தரையிறக்கப்படவில்லை.

Passenger dies on board flight from New Delhi to Singapore

அவர் யார், எப்படி இறந்தார் என்ற தகவலை தெரிவிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டது. விமானம் இன்று காலை 5.40 மணிக்கு சாங்கி விமான நிலையத்தை அடைய வேண்டியது. ஆனால் விமானம் முன்கூட்டியே 5.19 மணிக்கு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில்,

விமானத்தில் செல்கையில் மரணம் அடைந்தவருக்கு 30 வயதிற்கு மேல் இருக்கும். அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பயணம் செய்தார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+