பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல்.. 100 பேரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்த கிளர்ச்சி குழு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளது. ரயிலில் இருந்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதகாவும் பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பலோசிஸ்தான் மாகாணம் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோரி அங்கு கிளச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். பலோசிஸ்தான் சுதந்திர ராணுவம் என்ற பெயரில் இயங்கி வரும் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர்.

இந்த நிலையில்தான், ரயில் ஒன்றை கடத்தியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளது பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவர் நகரில் இருந்து பலோசிஸ்தானில் உள்ள குவெட்டா நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சுமார் 400 பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளதாகவும் 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலோசிஸ்தான் விடுதலை ஆர்மி (BLA) என்ற அந்த கிளர்ச்சி குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தங்களுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கினால் பிணைக்கைதிகள் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது.
ரயில்வே தண்டவாளத்தை கிளர்ச்சியாளர்கள் தகர்த்து ரயிலை நிறுத்த வைத்ததகாகவும் அதன்பிறகு ரயிலில் அவர்கள் ஏறி கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சென்றதாகவும் அவர்களில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பலோச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது.
ரயிலில் இருந்த பயணிகளை விடுவித்துவிட்டதாகவும் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர்களை மட்டுமே பிடித்து வைத்து இருப்பதகாவும் கூறிய பலோச் ராணுவம் விடுதலை, ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அனைவரும் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications