இந்தியாவுக்கு வேக்-அப் கால் கொடுத்த பெண்டகன் தலைவர்.. சீனாவை காட்டி போருக்கு ரெடியாகிறதா அமெரிக்கா!
சிங்கப்பூர்: தைவான் விஷயத்தில் சீனா சீரியஸாக இருப்பதாகவும், ராணுவத்தை பயன்படுத்தி தைவானையும் தென் சீன கடலையும் ஆக்கிரமிக்க ரெடியாகி வருகிறது என்றும், இதனால் இந்தியா உட்பட சீனாவின் அண்டை நாடுகள் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் பெண்டகன் தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்திர பாதுகாப்பு மன்றத்தில் பேசிய பெண்டகன் தலைவர் பீட் ஹெக்செத், இக்கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் பேசியதாவது,

"சீனா முன்வைத்திருக்கும் அச்சுறுத்தல் உண்மையானது. இந்த அபாயம் எப்போது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம். இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகார சமநிலையை மாற்ற இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதற்கு சீனா ரெடியாகி வருகிறது. இதற்கான நம்பகமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தென் சீன கடல் பகுதியை கைப்பற்ற அனைத்து வகையிலும் ராணுவ ரீதியாக சீனா தயாராகி வருகிறது. இதற்காக ஒத்திகையையும் பார்த்து வருகிறது. கடந்த சில நாட்களாக தைவான் தீவை சுற்றி சீனா நடத்திய பயிற்சிகள் விரைவில் உண்மையான ஆக்கிரமிப்புக்கான தாக்குதலாக மாறக்கூடும்.
உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக தென் சீனக்கடல் வழியாகத்தான் நடக்கிறது. ஆனால் இந்த பகுதியை முழுவதுமாக சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சீனா உரிமை கோர எந்த அடிப்படையும் கிடையாது என்று சர்வதேச தீர்ப்பு வந்திருந்தாலும் சீனா அதை மதிக்கவில்லை.
எனவே அமெரிக்கா இப்போது கம்யூனிச சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க தயாராகி வருகிறது. அதேபோல ஆசியாவில் உள்ள எங்களின் நட்பு நாடுகளும், உடனடியாக தங்கள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். சீனாவின் நடவடிக்கை நமக்கான வேக்-அப் கால்(Wake-up call)" என்று கூறியுள்ளார்.
இது இந்தியாவுக்கான வெளிப்படையான அழைப்பாக பார்க்கப்படுகிறது. 90களுக்கு பிறகு வந்த காங்கிரஸ், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து, வந்த பாஜக, இந்த உறவுகளை பல மடங்கு பலப்படுத்தியிருக்கிறது. இப்போதைய சூழலில் அமெரிக்காவின் பலமான வர்த்தக கூட்டாளியாகவும், ராணுவ கூட்டாளியாகவும் இந்தியா மாறியிருக்கிறது.
இப்படி இருக்கையில் தங்களுடைய நட்பு நாடுகள் தயாராக வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருப்பது இந்தியாவுக்கு 100% பொருந்தும். இந்தியாவைதான் பெண்டகன் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆண்டுக்கு 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் தென் சீனக்கடல் பகுதியை சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் ஆகிய நாடுகள் உரிமை கோருகின்றன. காலங்காலமாக இந்த கடல் எங்களுக்கு சொந்தமாக இருந்ததுதான். இப்போதும் கூட 90% பகுதி எங்களுக்குதான் சொந்தம் என்று சீனா வம்பு செய்கிறது. இதற்கு ஆதாரமாக 'nine-dash line' எனும் கற்பனை கோட்டை முன்வைக்கிறது.
இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு சிங்கபூர் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐநா வழிகாட்டுதலின்படி, ஒரு நாட்டிலிருந்து 200 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பரப்பை மட்டுமே அந்நாடு உரிமை கோர முடியும். அதற்கும் அப்பால் சென்றுவிட்டால், அது சர்வதேச கடல் பகுதியாக கருதப்படும் என்று கூறி, சீனாவின் உரிமை கோரலை நிராகரித்திருந்தது.
இருப்பினும் இந்த தீர்ப்பை ஏற்காத சீனா, தென் சீன கடல் பகுதியில் செயற்கையான சில தீவுகளை உருவாக்கி, அதில் ராணுவ தளவாடங்களை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த சூழலின் பின்னியில்தான் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications