சுனாமியில் தப்பிக்க ஜப்பான் மக்கள் செய்றதை பாருங்க.. மலையை நோக்கி ஓட்டம் - போக்குவரத்து நெரிசல்
டோக்கியோ: ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ளது. இந்நிலையில் உயிருக்கு பயந்து மக்கள் கடலோர பகுதிகளை காலி செய்து வருகின்றனர். இதனால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமான மக்கள் உயிருக்கு பயந்து உயரமான கட்டங்கள், மலை மேல் ஏறி குவிந்து வருகின்றனர்.
ரஷ்யாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. வீடுகள் குலுங்கியது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின.
ரஷ்யா - ஜப்பான் மட்டுமின்றி பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி தாக்கியது. ஜப்பானின் ஹோக்கைடோவில் முதல் முதலாக சுனாமி தாக்கியது. இங்கு 30 சென்டிமீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்தது.
இதனால் பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். உயிருக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் வீடு, ஹோட்டல்களை விட்டு கார்களில் வெளியேறினர். இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் இஷினோமாகி என்ற இடத்தில் 50 சென்டிமீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்கியது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் அருகே உள்ள ஹியோரியா மலை மீது குவிந்து வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications