குழந்தைகளுக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்காதீங்க... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
லண்டன்: ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொண்டால், அது உ டல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று விடுமாம்.

சிகரெட் மாதிரி தான் கூல்டிரிங்க்ஸும்....
புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும் அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

சர்க்கரை வியாதி காரணமாக...
உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி காரணமாக பல சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கசக்கும் சர்க்கரை...
லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் கிரஹாம் மெக்கிரேகர் கூறுகையில், தேவையில்லாமல் சரக்கரையை சேர்த்துக் கொள்வது அபாயகரமானது. டைப் 2 சர்க்கரை வியாதி, உடல் பருமன், பல் சீரழிவு ஆகியவற்றை இது ஏற்படுத்தும்.

ஆய்வுகள்....
பல காலமாக சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்தபடி உள்ளன. இருப்பினும் இதில் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றார்.

உடனடி நடவடிக்கைகள்....
இதற்கிடையே, சர்க்கரை அளவை உணவுகளில் குறைக்கும் நடவடிக்கைகளும் இங்கிலாந்தில் எடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலோரி அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்பு...
இங்கிலாந்தில் 2050ம் ஆண்டு வாக்கில், உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 50 பில்லியன் பவுண்டுகள் வரை பொருளாதார பாதிப்பும் ஏற்படுமாம்.

ஜூஸ் கூடாது...
பிராசஸ்ட் உணவுகள், யோகர்ட், மியூசலி, சாஸ், ஜூஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கண்ணுலயே காட்டாதீங்க...
கோக், பெப்சி போன்றவற்றை குழந்தைகள் கண்ணில் காட்டவே கூடாது என்றும் எச்சரிக்கிறார்கள். மேலும் குழந்தைளுக்கு ஒரு நாளைக்கு 6 ஸ்பூனுக்குக் குறைவாகவே சர்க்கரை தர வேண்டுமாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications