பெஷாவர் பள்ளி தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான்: தாலிபான்கள் அடுத்த மிரட்டல்
பெஷாவர்: பெஷாவர் பள்ளி தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் நேற்று 7 தீவிரவாதிகள் புகுந்தனர். அதில் ஒரு தீவிரவாதி 60 குழந்தைகள் இருந்த வகுப்பறைக்கு சென்று தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். மீதமுள்ள 6 தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 132 குழந்தைகள், 9 பள்ளி ஊழியர்கள் என 141 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. ராணுவம் தங்களையும், தங்களின் குடும்பத்தையும் தாக்குவதற்கு பதிலடி தான் இந்த தாக்குதல் என்று தாலிபான்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி கூறுகையில்,
இந்த தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான். இனி இது போன்று பல்வேறு தாக்குதல்கள் நடக்கும் என்றார்.
தீவிரவாதிகள் அரபியில் பேசியதாகவும், அவர்கள் பார்ப்பதற்கு வெளிநாட்டவர்கள் போன்று இருந்ததாகவும் மீட்கப்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications