For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”நாய்க்குட்டிதானேனு நம்பி ஏமாந்துட்டோம்”- நரிக்குட்டியை தத்தெடுத்து வளர்க்க நினைத்த ஜோடி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் காங்டாங் மாகாணத்தில் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுக்க இருந்த ஜோடி, அது நரி என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மழையால் அவர்களது வீட்டிற்கு வெளியில் ஒரு குட்டி விலங்கு அமர்ந்திருப்பதை அந்த கணவன் - மனைவி பார்த்துள்ளனர். உடனே அது நாய் குட்டி என்று நினைத்து தாங்களே எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர்.

Pet dog turns out to be fox in China

அந்தக் குட்டியை நன்றாக குளிப்பாட்டி, துடைக்கும் போது அதன் உடலில் சில மாற்றங்களை உணர்ந்துள்ளார். முக்கியமாக அதனுடைய வாலானது நாயை விட மிகவும் புசுபுசுவென இருந்துள்ளது.

மேலும், மிகவும் கூர்மையான பற்களையும், ஒரு மூக்கை நெருடும் வாசனையையும் பெற்று இருந்துள்ளது. குளிப்பாட்டியும் அந்த வாசனை அதன் உடலை விட்டு போகவில்லை.

அது தன்னுடைய இருப்பிடத்தை விட்டு செல்லவே முயன்றுள்ளது. பிறகு அதனைப் பற்றி ஆராய்ந்த பின்புதான் துருவப் பகுதியைச் சேர்ந்த நரி என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர், அந்நரி வனவிலங்கு காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

English summary
A couple in China's Guangdong province were shocked to discover that the dog which they had decided to adopt was actually a fox, the media reported on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X