ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்
மணிலா: அரசு துறைகளில் ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி எறிவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்டோ தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த மே மாதம் ரோட்ரிகோ டியூடெர்டோ பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பில் ரோட்ரிகோ தீவிர கவனம் செலுத்தி வருகிறார். போதைப்பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் என சுமார் 6000 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு துறைகளில் ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வானில் இருந்து வீசி எறிவேன் என ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏற்கனவே, தான் இதற்கு முன்பு மேயராக பதவி வகித்தபோது மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் ரோட்ரிகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications