பெய்ரூட்டை பதம் பார்த்த பாஸ்பரஸ் குண்டு! பெண்கள், குழந்தைகள் பலி! போர் விதியை மீறும் இஸ்ரேல்
பெய்ரூட்: போர் என்பதே மனித குலத்திற்கு எதிரானதுதான். இருப்பினும் இந்த போரில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதனை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், அங்குள்ள எண்ணெய் வளங்களை முழுமையாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டே இஸ்ரேல் எனும் நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இஸ்ரேல் கடந்த காலங்களில் பெரிய அளவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. பாலஸ்தீனத்தையும், மொத்த மத்திய கிழக்கையும் இஸ்ரேல் விழுங்குவதற்கு முன் அதை காப்பாற்ற வேண்டும் என்று சில அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இதில் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் மிக முக்கியமானதாகும். இது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டங்களை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த ஆண்டு திடீரென இஸ்ரேலை, ஹமாஸ் தாக்கியது. இந்த தாக்குதலில் 1500 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததாக சொல்லப்பட்டாலும், அதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஹமாஸை ஒழிப்போம் என இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது போரை அறிவித்தது.
போர் நடந்த ஓராண்டில் ஹமாஸ் ஒழியவில்லை. மாறாக 41,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும்தான் அதிகம். மேலே குறிப்பிட்டபடி, போர் என்பதே மனித குலத்திற்கு மிகப்பெரிய எதிரிதான். இருப்பினும், போருக்கு என சில விதிமுறைகள் இருக்கின்றன. பொதுமக்கள் போரால் எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட கூடாது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டால் அது போர் குற்றமாக கருதப்படும் என ஐநா கூறுகிறது.
இருப்பினும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து இதைத்தான் செய்து வருகிறது. காசாவை தொடர்ந்து, லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல், பெய்ரூட் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த குண்டுகளிலிருந்து வெளிவரும் வெள்ளை பாஸ்பரஸ், மனித தோலை அரிக்கும் திறன் கொண்டதாகும். துணிகள் மீது பட்டாலும் எரிந்துவிடும். எனவே கடுமையான தீ காயத்தை ஏற்படுத்தும் பாஸ்பரஸ் குண்டுகளை போரின் போது பயன்படுத்துவது போர் குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும். இனி வரும் நாட்களிலாவது பெய்ரூட் மீது பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது தெற்கு லெபனானிலிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஹிஸ்புல்லாக்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையே தெற்கு லெபனானில் போர் நடந்தது. இதனை ஐநா தலையிட்டு நிறுத்தியது. போர் நடந்த பகுதியானது 'பாதுகாப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில்தான் தற்போது இஸ்ரேல் தரைப்படை ஊடுருவ திட்டமிட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் எதிர்பார்க்காத அடி.. மிகப்பெரிய எண்ணெய் ஆலையை தாக்கிய ஈரான்! மின்சாரம் துண்டிப்பு -
உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா! -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானை விடுங்க.. இஸ்ரேலுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்! திசை மாறும் போர்! -
ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!










Click it and Unblock the Notifications