நல்லா கதை பாடுறீங்க, போய் படம் எடுங்க: நாளிதழை விளாசிய மலேசிய விமான கேப்டன் மகள்
கோலாலம்பூர்: தனது தந்தை குழப்பமாக இருந்ததாக தான் தெரிவிக்கவில்லை என்று கடலுக்குள் விழுந்த மலேசிய விமான கேப்டனின் மகள் ஆயிஷா தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் விழுந்த விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா குழம்பிய மனநிலையில் இருந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் அந்த செய்தி பொய் என்று கேப்டனின் மகள் ஆயிஷா ஜஹரி(28) தெரிவித்துள்ளார்.

ஆயிஷா
டியர் டெய்லி மெயில், கதை கட்டுவதிலும், சிறப்பாக திரைக்கதை எழுதுவதிலும் திறமை வாய்ந்த நீங்கள் சினிமா படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கேப்டன் ஷாவின் மகள் ஆயிஷா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு
உங்கள் மீது ஆண்டவன் கருணை புரியட்டும். நான் உங்களை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டேன் என்று ஆயிஷா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

கேப்டன்
என் தந்தை முன்பு போன்று இல்லை. அவர் குழம்பிய மனநிலையில் ஏதோ தொலைந்தது போன்று அவருக்கென ஒரு உலகத்தில் இருந்தார் என ஆயிஷா தெரிவித்ததாக முன்பு செய்திகள் வெளியாகின.

மனைவி
கேப்டன் ஷா தன்னுடன் பல வாரங்களாக பேசவில்லை என்று அவரது மனைவி பாய்ஷா கானும் முஸ்தபா கான் விசாரணையாளர்களிடம் தெரிவித்ததாக அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்திருந்தார்.

மன அழுத்தம்
மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த ஷாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதிலும் பிரச்சனை என்பதால் மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications