விமானியின் செல்ஃபி மோகத்தால் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்- 2 பேர் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் விமானி ஒருவர் செல்ஃபி எடுத்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் உள்ள கொலரடோ மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி செஸ்னா 150கே என்ற சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி அம்ரித்பால் சிங்(29) மற்றும் பயணி ஒருவர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மையம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் விமானி அறையில் இருந்த கோப்ரோ கேமராவில் பதிவாகியிருந்த காட்சி மூலம் விபத்துக்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அம்ரித்பால் சிங் தனது செல்போன் மூலம் பல செல்ஃபிக்கள் எடுத்துள்ளார். அப்படி செல்ஃபி எடுக்கையில் அவரின் கவனம் சிதறியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
விமானியின் செல்ஃபி மோகத்தால் விமானத்தில் இருந்த பயணியும் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications