காந்தி காட்டிய எதிர்ப்பு.. இந்தியா - இஸ்ரேல் உறவு மேம்பட்டது எப்படி? நச்சுனு 16 பாயிண்ட்டில் எளிய விளக்கம்
டெல்அவிவ்: இஸ்ரேல் என்ற நாடே உருவாக கூடாது என்று 'தேசப்பிதா' மகாத்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இஸ்ரேல் தனி நாடாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 1947 ல் உருவானது. அதன்பிறகும் இந்தியா - இஸ்ரேல் உறவு சொல்லும்படியாக இல்லாத நிலையில் இப்போது ரஷ்யாவுக்கு அடுத்ததாக இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளது. இந்த 78 ஆண்டு காலத்தில் என்ன நடந்தது? இஸ்ரேல் - இந்தியா உறவு தொடர்ந்து மேம்பட்டு வருவதற்கான பின்னணி பற்றி நச்சுனு 16 பாயிண்ட்டில் எளிய முறையில் தெரிந்து கொள்ளுங்கள்.

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேலும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமர் மோடி இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.
இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர்.
நாடாளுமன்றத்தில் உரை
விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புன்னகையுடன், மோடியை வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு புன்னகை தழும்ப பரஸ்பரம் நலம் விசாரித்து கைக்குலுக்கியபடி பேசினர். அதன்பிறகு பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியா எப்போதும் இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மேலும் மோடியை வரவேற்க இஸ்ரேல் எம்பிக்கள் மோடி.. மோடி என உற்சாகமாக கோஷமிட்டனர்.
காந்தி காட்டிய எதிர்ப்பு
தற்போதைய சூழலில் இந்தியா - இஸ்ரேல் உறவு சிறப்பாக உள்ளது. ஆனால் ஒருகாலத்தில் நம் நாடு, இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக இஸ்ரேல் நாடு உருவாகவே மகாத்மா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் இஸ்ரேலை தொடக்க காலத்தில் நம் நாடு அங்கீகரிக்காத நிலையில் அந்த நாடு எப்படி நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக இப்போது மாறி உள்ளது? இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவு மேம்பட்டது பற்றி ஆண்டு வாரியாக பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
இஸ்ரேலை அங்கீகரித்த இந்தியா
* 1938ல் மகாத்மா காந்தி, ''பாலஸ்தீனம் அரபியர்களுக்குச் சொந்தம். இதனால் அங்கு யூதர்களுக்கான நாடு அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்'' என்று கூறினார்.
* 1947 ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீனப் பிரிவினை திட்டத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
* 1950ல் இந்தியா -இஸ்ரேலை அங்கீகரித்த போதும் தூதரக உறவு தொடங்காமல் இருந்தது.
* 1953ல் இஸ்ரேல் தான் நம் நாட்டில் மும்பையில் தூதரகம் திறந்தது. ஆனால் பாலஸ்தீன ஆதரவு மற்றும் அணிசேரா கொள்கை காரணமாக இருதரப்பு உறவுகள் மேம்படவில்லை. குறைந்த அளவிலேயே இந்தியா - இஸ்ரேல் உறவு இருந்தது.
இந்தியாவுக்கு உதவிய இஸ்ரேல்
* 1962 இந்திய-சீனா போர் மற்றும் 1971 இந்திய-பாகிஸ்தான் போர்களின்போது, இஸ்ரேல் இந்தியாவிற்கு ரகசியமாக இராணுவ உதவிகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.
* 1974ல் பாலஸ்தீன விடுதலை அமைப்பான பிஎல்ஓ-வையும், 1988ல் பாலஸ்தீன நாட்டையும் இந்தியா அங்கீகரித்தது. இது வலுவான பாலஸ்தீன நிலைப்பாட்டைக் காட்டியது.
இதனால் இஸ்ரேல் நம் நாட்டின் மீது அதிருப்தியானது.
* பனிப்போர் முடிவடைந்த சூழலில், 1992 ஜனவரி 29ல் இந்தியாவும், இஸ்ரேலும் முழுமையான தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. இது இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
* 1999 கார்கில் போரின்போது, இஸ்ரேல் நம் நாட்டுக்கு முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வழங்கியது.
இஸ்ரேலுடன் மோடி நெருக்கம்
* 2003ல் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் நம் நாட்டுக்கு வருகை தந்தார். இதன்மூலம் நம் நாட்டுக்கு வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றார்.
* 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் சபாத் ஹவுஸ் பகுதியில் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இருநாட்டு பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.
* 2017ல் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். அதுவரை நம் நாட்டின் பிரதமர்கள் யாரும் இஸ்ரேல் செல்லாத நிலையில் முதல் முறையாக பிரதமர் மோடி சென்றார். இதனால் இஸ்ரேலுக்கு பயணம் செய்த முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
* இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி அண்டை நாடான பாலஸ்தீனத்துக்கு செல்லவில்லை. பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் உள்ளது. இதனால் பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது இஸ்ரேல் உடனான உறவை பலப்படுத்தும் ராஜதந்திர நடவடிக்கையாக பார்ககப்பட்டது.
நெதன்யாகு இந்தியா வருகை
* 2018ல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம் நாட்டுக்கு வருகை தந்தார். பாதுகாப்பு துறை, விவசாயம், நீர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட தொடங்கியது.
* 2020ல் இந்தியா- இஸ்ரேல் நாடுகள் I2U2 குழுமத்தில் (இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா) இணைந்தன. இது பொருளாதாரம் மற்றும் ஸ்ரேட்டஜிக் ஒத்துழைப்பை அதிகரித்தது.
மோடிக்கு கிடைத்த பெருமை
* 2023-2024 இஸ்ரேல்-ஹமாஸ் போரி்ன் தொடக்கப்புள்ளி என்பது இஸ்ரேலுக்குள் நுழைந்து பொதுமக்களை பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கொன்றதோடு, பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை நம் நாடு கண்டித்தது. அதேவேளையில் காசாவில் இஸ்ரேல் தீவிரமாக போர் புரிந்தபோது பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை நம் நாடு வழங்கியது. இதன்மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் சமநிலையான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதை நம் நாடு வெளிக்காட்டியது.
* 2026 பிப்ரவரி 25 ம் தேதியான இன்று பிரதமர் மோடி 2வது முறையாக இஸ்ரேல் சென்று அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார். இதன்மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications