சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்புடன் பிரதமர் மோடி சந்திப்பு- ஷாங்கரி லா உரையாடலில் பங்கேற்பு
சிங்கப்பூர் அதிபர் ஹலிமாவை சந்தித்தார் பிரதமர் மோடி.
சிங்கப்பூர்: இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பை இன்று சந்தித்து பேசினார். சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 5 நாட்கள் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மலேசியா சென்றார் மோடி.

அங்கு 92-வயது பிரதமர் மஹாதீர் முகமதுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மலேசியாவில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் 'Go Back Modi' என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
Prime Minister Narendra Modi receives a ceremonial welcome at the Istana, the office of the President of the Republic of Singapore. Prime Minister of Singapore Lee Hsien Loong also present. pic.twitter.com/Me9DPNxIHl
— ANI (@ANI) June 1, 2018
பின்னர் சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி. அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் இந்திய மொபைல் "ஆப்"கள் குறித்து மோடி விளக்கினார்.
#WATCH PM Narendra Modi receives a ceremonial welcome at the Istana, the office of the President of the Republic of Singapore. Prime Minister of Singapore Lee Hsien Loong also present. pic.twitter.com/BS8hurWlTx
— ANI (@ANI) June 1, 2018
இந்திய- சிங்கப்பூர் நிறுவனங்கள் ஏற்பாட்டிலான தொழில் முனைவோர் மாநாட்டில் மோடி பங்கேற்றார். இன்று அரசு முறைப்படி அதிபர் ஹலிமா யாகூப்பை சந்தித்து பேசினார். அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஷாங்கரி லா எனப்படும் உரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications