Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத்தார் நாட்டில் பிரதமர் மோடி.. இந்தியா- கத்தார் நட்புறவு மேம்படும்.. உற்சாக ட்வீட்

Subscribe to Oneindia Tamil

தோஹா: ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு தோஹா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கத்தார் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

ஐக்கிய அமீரகத்திற்கு பயணம் செல்லும் முன்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்குச் செல்கிறேன். எனது இந்த பயணம் இவ்விரு நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும். பிரதமராக பதவியேற்ற பின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏழாவது முறையாக செல்கிறேன்.

 PM Modi Meets with PM Sheikh Mohammed bin Abdulrahman Al Thani boost India-Qatar friendship

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள நட்புறவின் ஆழத்தை இது காட்டுகிறது. எனது சகோதரர் முகம்மது பின் ஜயாதை சந்திக்க இருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைக்கும் கவுரவத்தைப் பெற இருக்கிறேன். அபுதாபியில் உள்ள இந்திய சமூகத்துடன் உரையாட உள்ளேன். கத்தார் அதிபர் தமிம் பின் ஹமாத்ஐ சந்திக்க உள்ளேன். தமிம் பின் ஹமாத் தலைமையில் கத்தார் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அபுதாபி விமான நிலையம் சென்றடைந்தார். அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அகமத் பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு,எரிசக்தி , இருநாட்டு மக்களிடையேயான நல்லுறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி - அதிபர் நஹ்யான் இடையே பல்வேறு துறைசார் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனையடுத்து டெல்லி ஐஐடியின் அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு என்பது இரண்டு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து 27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS கோயில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படும் சுவாமி நாராயண், திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன.

ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்த பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக கத்தார் புறப்பட்டு சென்றார். தோஹா விமான நிலையத்தில் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சோல்தான் பின் சாத் அல்-முரைக்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து தோஹாவில் கத்தார் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி மற்றும் நிதி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில் , "பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் ஒரு அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. எங்களின் விவாதங்கள் இந்தியா-கத்தார் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக அமைந்தது" என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+