மோடிக்கு உயரிய விருது.. இதுவரை வெளிநாட்டு லீடர்கள் வாங்கியதே கிடையாது.. நெகிழ வைத்த எத்தியோப்பியா
அடிஸ் அபாபா: பிரதமர் மோடி இப்போது அரசு முறை பயணமாக ஜார்டன், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜார்டனில் பிரதமர் மோடியை அந்நாட்டுப் பட்டத்து இளவரசர் தனது சொந்த காரில் அழைத்துச் சென்ற நிலையில், எத்தியோப்பியாவிலும் அதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்குப் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் தனது காரில் அழைத்துச் சென்றார்.
பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை அவர் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் ஜோர்டான் புறப்பட்டு சென்றார். இந்தியா - ஜோர்டான் இடையேயான 75 ஆண்டு கால தூதரக உறவின் ஒருபகுதியாக பிரதமர் மோடி சென்றார். ஹுசைனியா அரண்மனையில் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கும் கூட பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II அவரே தனது காரில் பிரதமர் மோடியை அழைத்துச் சென்றார்.
பிறகு இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றி பிரதமர் மோடி இரண்டாம் மன்னர் அப்துல்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று எத்தியோப்பியா நாட்டுக்கு சென்றார். எத்தியோப்பியா நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. குறிப்பாக நோபல் அமைதி விருது பெற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். மேலும், தனது காரிலேயே அவர் பிரதமர் மோடியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. ‛தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' என்ற பெயர் கொண்ட விருதை எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபிய் அஹமது அலி, பிரதமர் மோடிக்கு வழங்கினார். இதன்மூலம் ‛The Great Honour Nishan of Ethiopia' விருது பெற்ற முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
பிரதமர் மோடி இந்தப் பயணத்தில் எத்தியோப்பியப் பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதுமட்டுமின்றி இன்று பிரதமர் மோடி, எத்தியோப்பிய நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்திலும் உரையாற்றுகிறார். மேலும், அங்கு வாழும் புலம்பெயர் இந்தியர்களையும் சந்தித்து உரையாற்றுகிறார். அதன்பிறகு எத்தியோப்பியாவில் இருந்து பிரதமர் மோடி ஓமனுக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications