வெளிநாட்டில் மைக்கை நீட்டிய செய்தியாளர்கள்! ஓ மை காட்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத மோடி.. என்ன நடந்தது
டென்மார்க்: பிரதமர் மோடியிடம் டென்மார்க்கில் செய்தியாளர்கள் திடீரென கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பிரதமர் மோடி தற்போது ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் செல்ல இருக்கிறார். இந்தியா திரும்பும் முன் பிரான்சில் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யாவை இந்தியா எதிர்க்காத நிலையில் ஐரோப்ப நாடுகள் இந்தியா மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு இடையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டென்மார்க்
இந்த பயணத்தில் பிரான்சில் அதிபர் மேக்ரூன் உடன் மோடி சந்திப்பு நடத்த உள்ளார். முன்னதாக டென்மார்க் பயணத்தின் போது பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் மேட் உடன் சந்திப்பு நடத்தினார். இரண்டு நாட்டு உறவு, பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர். அங்கு வசிக்கும் இந்தியர்கள் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியா வரும்படி அவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

சிறப்பு வரவேற்பு
அதன்பின் டென்மார்க் ராணி மார்க்ரெத் II உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இவர்கள் ஒன்றாக உணவு சாப்பிட்டனர். அதேபோல் ஜெர்மனியிலும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தனர். உக்ரைன் ரஷ்ய போருக்கு இடையில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்த பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர்கள்
இந்த நிலையில் பிரதமர் மோடி டென்மார்க்கில் இருக்கும் போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். டென்மார்க் சென்று உள்ள இந்திய செய்தி நிறுவன செய்தியாளர்கள் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்றனர். அவர் காருக்கு செல்லும் போது அருகில் சென்ற செய்தியாளர்கள் சார் எங்களை உள்ளே விடவில்லை என்று பட்டென மைக்கை நீட்டி சொன்னார்கள். இதை பிரதமர் மோடி எதிர்பார்க்கவில்லை.

ஓ மை காட்
சட்டென செய்தியாளர்கள் எங்கிருந்தோ வந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து ஓ மை காட்.. நான் போய் அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்க வேண்டுமா? என்று சட்டென பிரதமர் மோடி கூறினார். அதன்பின் தொடர்ந்து இந்தியில் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து பிரதமர் மோடி கிளம்பி சென்றார். பொதுவாக பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை நடத்த மாட்டார். அவர் பிரதமராக பதவி ஏற்றபின் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து தனியாக பதில் அளித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications