பிரதமர் மோடிக்கு ‘குதிரை’யை பரிசாக அளித்த மங்கோலிய பிரதமர்!
உலன்பெடோர் : மங்கோலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அழகிய குதிரை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
சீனப்பயணத்தை முடித்துக் கொண்டு மங்கோலியா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. தலைநகர் உலன்பெடோரில் உள்ள சிங்கிஸ் கான் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கோலிய பிரதமர் சிமட் சைக்ஹான்பிலெக்கை மோடி சந்தித்துப் பேசினார். பின்னர் சிமட் - மோடி முன்னிலையில் இந்தியா - மங்கோலியா இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மங்கோலிய நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றினார். அப்போது இந்தியாவின் சிறப்புகள் குறித்து அவர் பேசினார்.

பிரதமர் மோடிக்கு மங்கோலியா பிரதமர் சிமட் சைக்கான்பிலெக், அழகிய குதிரை ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தார். பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபருக்கு, 13வது நூற்றாண்டைச் சேர்ந்த மங்கோலியர்களின் வரலாறு குறித்த ஓலைச் சுவடியின் புதுப்பித்த பிரதியை பரிசாக அளித்தார்.
மங்கோலியா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications