பிரதமர் மோடியிடம் இருந்து போன கால்.. உடனே சீக்ரெட் மீட்டிங்கை நிறுத்திய இஸ்ரேல் பிரதமர்! என்னாச்சு
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த சூழலில், அது இப்போது முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு- பிரதமர் மோடி உரையாடியுள்ளனர். சீக்ரெட் மீட்டிங் ஒன்றில் நெதன்யாகு பங்கேற்றிருந்த நிலையில், அதைப் பாதியில் நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்தது. ஹமாஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதால் காசாவில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்குப் பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வந்தனர். இருப்பினும், இதை இஸ்ரேல் முதலில் ஏற்கவே இல்லை.

டிரம்ப் திட்டம்
இந்தச் சூழலில் தான் டிரம்ப் காசாவில் அமைதியை ஏற்படுத்த 21 அம்சத் திட்டத்தை முன்மொழிந்திருந்தார். டிரம்ப் கொடுத்த பிரஷரால் இந்தத் திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் அறிவித்தது. தொடர்ந்து சில நாட்களில் ஹமாஸும் இந்தத் திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது. இதன் மூலம் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழலை எட்டியுள்ளது என்றே சொல்லலாம்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நமது பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். மேலும், மோதல் முடிவுக்கு வரும் சூழலை எட்டடியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமருடன் பேச்சு
இரு தலைவர்களும் உரையாடியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் முதலில் உறுதி செய்தது. அனைத்துப் பணய கைதிகளையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி, பிரதமர் நெதன்யாகுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும் இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் "என் நண்பர் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினேன்.. அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். பணயக் கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிப்பது குறித்த ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மீட்டிங்கை நிறுத்திய நெதன்யாகு
இதற்கிடையே இந்த மீட்டிங் தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் குறித்துப் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்ட விவாதம் நடந்துள்ளது. நெதன்யாகு தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தபோது தான் பிரதமர் மோடியின் கால் வந்துள்ளது. இதனால் அந்தப் பாதுகாப்பு கூட்டத்தையே பாதியில் நிறுத்திவிட்டு, நெதன்யாகு பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார். தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
முக்கியம்
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த நிலையில், அது இப்போது முடிவுக்கு வருவது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் 20 அம்ச திட்டத்தை வெளியிட்டிருந்த நிலையில், அதன்படியே போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. முதலில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பதில் இஸ்ரேல் அமைச்சரவையிலேயே கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.
டிரம்ப்பின் இந்த ஒப்பந்தத்தை ஏற்கக்கூடாது என்றும் ஹமாஸை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் அரசியில் இருந்த தீவிர வலதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவர்களை எல்லாம் நெதன்யாகு தான் சமாதானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வருவதால் காசா மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications