விஷ வாயு கசிவு.. கொத்துக் கொத்தாக தரையில் விழுந்து பலியான மக்கள்.. தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்!
ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஆக்சைடு வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கான தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாசித்த 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வாயு கசிவால் மயக்கமடைந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, உரிமம் பெறாத சுரங்கத் தொழிலாளர்கள், தங்கத்தை சுத்திகரிக்க பயன்படுத்தியபோது அபாயகரமான நைட்ரேட் வாயு கசிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சம்பவ இடத்தில் 16 பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்களின் வருகைக்குப் பிறகு, வாயு கசிவால் மயக்கமடைந்த சிலரை உயிர்ப்பிக்க முடிந்தது, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்று அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ளவர்களில், நான்கு பேர் மோசமான நிலையில் உள்ளனர், 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் ஓரளவுக்கு நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் கண்டறிய பாதிக்கப்பட்ட முழு பகுதியையும் நாங்கள் மும்முரமாகச் சரிபார்த்து வருகிறோம் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வில்லியம் என்ட்லாடி கூறியுள்ளார்.
இதே பகுதியில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ஒரு பெரிய எரிவாயு டேங்கர் வெடித்ததில் 41 பேர் கொல்லப்பட்டனர். திரவ பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றிச் சென்ற டிரக் ஒரு பாலத்தின் கீழ் சிக்கியது. அதைப் பார்க்க ஏராளமான மக்கள் அங்கு சென்றபோது, டேங்கர் வெடித்ததில் 41 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications