இளமையில் இனிமை சேர்ப்பது காதலா? நட்பா?: துபாயில் பாப்பையா பட்டிமன்றம்
துபாய்: துபாயில் டிடிஎஸ் இவென்ட்ஸ் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பட்டிமன்றம் 16.01.2015 வெள்ளிக்கிழமை மாலை துபாய் இந்தியப் பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற்றது.
துவக்கமாக அமீரக தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு துபாய் ஆலியா முஹம்மது டிரேடிங் மேலாண்மை இயக்குநர் எம். எம். ஷேக் தாவூது தலைமை வகித்தார். டிடிஎஸ் இவென்ட்ஸ் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துணைத் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலமன் பாப்பையா தலைமையில் இளமை காலங்களில் பெரிதும் இனிமை சேர்ப்பது காதலா? நட்பா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. ராஜா, கபீர், அமீரா ஆகியோர் ஒரு அணியிலும், பாரதி பாஸ்கர், சசிகுமார், சுரேஷ் ஆகியோர் மற்றொரு அணியிலும் இடம் பெற்றனர்.
பாடல் ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன் மற்றும் நடன ஆசிரியை கவிதா பிரசன்னா ஆகியோரது வடிவமைப்பில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிறுவனர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு ராயல் செஃப் நிறுவனம் வழங்கிய அரிசி, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சமூக சேவகர் கே. குமார், வெஸ்டர்ன் ஆட்டோ கமால், பிளாக் துளிப் பிளவர் யஹ்யா, பவர் குரூப் மேலாண்மை இயக்குநர் முகம்மது ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ. முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், பிரசன்னா, விஜயராகவன், பாலகிருஷ்ணன், விஜயேந்திரன், சுந்தர் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications