கடுமையான முதுகுவலி -புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை..!
வாடிகன்: கடும் முதுகுவலி காரணமாக புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை.
ஆண்டுதோறும் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெறும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொள்வார். அவரிடம் ஆசி பெறுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிவார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொள்ளவில்லை. இதேபோல் நள்ளிரவு நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்கவில்லை.
இது பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்துள்ளது. இதனிடையே போப் ஆண்டவரின் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி இது குறித்து கூறியிருப்பதாவது; ''வயது முதிர்வு காரணமாக முதுகு மற்றும் கால் மூட்டுகளில் வலிகளுடன் போப் ஆண்டவர் அவதிப்பட்டு வருகிறார். இதனால் புத்தாண்டு பிரார்த்தனையில் அவர் பங்கேற்க முடியாமல் போய்விட்டது''.

இதனிடையே இன்று மதியம் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தின் மாடத்தில் தோன்றி மக்களுக்கு ஆசி வழங்குவார் போப் ஆண்டவர் என தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று போப் ஆண்டவரிடம் ஆசி பெற வேண்டி ஏராளமானோர் வாடிகன் நகரில் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸ்க்கு 85 வயதாகிவிட்டதால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறார் என்பது கவனிக்கதக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications