ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்
வாட்டிகன்: 5 வார தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயது முதிர்வு மற்றும் சுவாச கோளாறு காரணமாக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து உடல்நலம் தேறிவந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88). வயது முதிர்வு மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் அவதியுற்று வருகிறார். சிறு வயதிலேயே போப் பிரான்சிஸ்க்கு நுரையீரலில் ஒரு பகுதி அகற்றப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது அவருக்கு சுவாச கோளாறு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனினும் பொது வெளியில் மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் 14 ஆம் தேதி சுவாச கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி ஆஸ்பத்திரியில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஏற்கனவே 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்திருந்தார்.
இதனால் அவரது உடல்நிலை குறித்து பலரும் கவலை அடைந்தனர். ஆனால் தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர் போப் பிரான்சிஸ் நலமாக இருப்பதாக வாட்டிகன் செய்தி வெளியிட்டது. அவரது உடல் நிலை தேறியது. இதையடுத்து நேற்று போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர்ந்து வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்துக்கு அருகில் தான் வசித்து வரும் ஓட்டலுக்கு சென்றார். போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், நிமோனியா பாதிப்பில் இருந்து மீள குறைந்தது அவர் 2 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து 5 வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று முன் தினம் தான் அவர் பொது வெளியில் தோன்றினார்.
அதாவது அவரை காண மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதையடுத்து மருத்துவமனை முன்பு குவிந்த மக்களுக்கு அவர் பால்கனியில் இருந்தபடி ஆசி வழங்கினார். கடந்த 2013 ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பொறுப்பேற்ற இவர் நீண்ட நாட்கள் பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது இதுதான் முதல் முறை. வாட்டிகன் திரும்பியுள்ள போப் பிரான்சிஸ் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி பிரிட்டன் மன்னர் சார்லஸை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications