உக்ரைனில் இடைவிடாத போர்.. ”காட்டுமிராண்டித் தனமான சண்டை” புடினை மறைமுகமாக விமர்சித்த போப் பிரான்சிஸ்
வாட்டிகன் : சூரியன் உதிக்கும் தேசத்திலிருந்து இப்போது போரின் இருண்ட நிழல்கள் பரவியுள்ளன எனவும், தேசியவாத நலன்களுக்காக சில வல்லமையாளர்கள் மோதல்களைத் தூண்டிவிடுகிறார்கள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை போப் பிரான்சிஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா ராணுவம் கடந்த சுமார் 38 நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் தாக்குதலை தொடங்கியது.
பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கிய நிலையில் பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதோடு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் போர்
பேச்சுவார்த்தைக்கு தயார் என ஒரு புறம் கூறினாலும் மற்றொருபுறம் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். இது வரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் போர் நிறுத்தப்படவில்லை. 39வது நாள் போர் வரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் போர் தொடர்ந்து வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கும் உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உச்ச கட்டமாக ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

ரஷ்யா மறுப்பு
அதே நேரத்தில் பிப்ரவரி 24 அன்று தொடங்கிய நடவடிக்கையில் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதாக வெளியான தகவல்களை ரஷ்யா மறுத்து வருகிறது. இது ஒரு "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்றும், மாறாக உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அண்டை நாடுகளை இராணுவமயமாக்க மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை குறைக்கவே இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என ரஷ்யா கூறி வருகிறது.

போப் பிரான்சிஸ் கண்டனம்
இந்நிலையில் போப் பிரான்சிஸ் ஏற்கனவே ரஷ்யாவின் வார்த்தை நிராகரித்ததோடு, இது ஒரு போர் என்று கூறி வருகிறார். உக்ரைன் போர் ஆரம்பித்த நாளில் இருந்தே போப் பிரான்சிஸ் போருக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். முதன்முறையாக ரஷ்ய தூதரகம் சென்ற அவர், போரை நிறுத்த கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் போர் நடக்கும் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு பயண செய்ய ஆலோசித்து வருவதாகவும், உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மறைமுகமாக விமர்சித்த போப் பிரான்சிஸ், தேசியவாத நலன்களுக்காக புடின் மோதலை தூண்டி வருவதாகவும் கூறினார்.

புடின் மீது விமர்சனம்
இரண்டு நாள் பயணமாக மால்டாவிற்கு செல்லும் அவர் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரான்சிஸ் இந்த கருத்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய் அவர், "ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து, சூரியன் உதிக்கும் தேசத்திலிருந்து, இப்போது போரின் இருண்ட நிழல்கள் பரவியுள்ளன. பிற நாடுகளின் படையெடுப்புகள், காட்டுமிராண்டித்தனமான சண்டைகள் மற்றும் அணுகுண்டு அச்சுறுத்தல்கள் ஆகியவை தொலைதூர கடந்த காலத்தின் கொடூரமான நினைவுகள் உள்ளது," போப் பிரான்ஸிஸ் கூறினார். மேலும், "மீண்டும் ஒருமுறை தேசியவாத நலன்களுக்காக சில வல்லமையாளர்கள், மோதல்களை தூண்டிவிடுகிறார்கள் எனவும் புடின் பெயரை குறிப்பிடாமல் அவர் குற்றம்சாட்டினார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications