For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ்

Google Oneindia Tamil News

ரோம்: ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழும் வகையில் அதை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கை என்பதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. சில எதிர்க்கின்றன. அந்த வகையில் போப் பிரான்சிஸ் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

Pope Francis says that Homosex people are children of God

இதுகுறித்து புதன்கிழமை எவ்ஜெனி அஃபினீவ்ஸ்கை இயக்கிய பிரான்செஸ்கோ என்ற ஒரு ஆவணப்படம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில் அவர் பேசுகையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரே குடும்பமாக இருக்க உரிமை உள்ளது.

அவர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள். அவர்களை யாரும் வெளியேற்ற கூடாது. இதுகுறித்து யாரும் வருத்தப்படக் கூடாது. ஒரே பாலினத்தவர்களை அங்கீகரிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்காக நான் போராடுவேன் என்றார்.

ஒரு முறை மூக்குக்குள் குச்சியால குடையறதே பிடிக்கலையே.. 20 முறை கொரோனா டெஸ்ட் எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!ஒரு முறை மூக்குக்குள் குச்சியால குடையறதே பிடிக்கலையே.. 20 முறை கொரோனா டெஸ்ட் எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!

இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் தத்தெடுக்கப்பட்ட 3 குழந்தைகளுடன் தேவாலயத்திற்கு வருவது போலும் அவர்களை போப் உற்சாகப்படுத்துவது போன்றும் அந்த ஆவணப்படத்தில் படமாக்கப்பட்டது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரே குடும்பமாக வாழ்வதை அங்கீகரிக்க சட்டத்திருத்தம் தேவை என்பதை முதல்முறையாக 83 வயது போப் ஆண்டவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pope Francis says that homosex people are children of God. They have a right to be in a family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X